எட்டு மணியாச்சுன்னா எப்படி வெள்ளைச்சாமி, சின்ராசு, வெள்ளியங்கிரி ஆகியோர் பாட ஆரம்பித்து விடுவார்களோ, அது போல தீபாவளி வந்து விட்டால் மோடி போட்டோஷூட்டுக்கு பாதுகாப்புப் படை வீரர்களை பார்க்க போய் விடுவார்.
வழக்கமான காஸ்ட்யூமை விட பாதுகாப்புப் படை அதிகாரியின் காஸ்ட்யூம் கொஞ்சம் கெத்தாக இருப்பதால் தன் நடவடிக்கையோ, ஆட்சித்தரமோ, நாணயமோ கெத்தாக இல்லையென்றாலும் போடும் வேஷமாவது கெத்தாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கறாராக இருக்கிறார்.
நேற்றும் கூட ஒரு போர்க்கப்பலுக்கு போய் வேடிக்கை பார்த்துள்ளார்.
வருஷா வருஷம் ஒரே படம்னா போரடிக்குது மோடி. நீங்க ஏன் ஒரு தடவை விமானத்துல போய் பாராசூட்டுல குதிக்கக்கூடாது. போட்டா எல்லாம் செம ட்ரெண்டியா இருக்கும்ல !!!
பிகு: இரண்டு போட்டோ அவர் பக்கத்திலிருந்து எடுத்து சேமித்தேன். இவரோட அற்ப ஆசைக்கு நாம வேற விளம்பரம் கொடுக்கனுமா என்று இங்கே பகிரவில்லை.
No comments:
Post a Comment