Wednesday, October 8, 2025

முதல்வரையும் முஸ்லீம்களையும் நக்கலடிக்கும் தோசை மாறன்

 


தோசை மாறன் என்று அன்பில்லாமல் அழைக்கப்படுகிற, நிஜத்தில் மதியற்றவரானாலும் மதிமாறன் என்று பெயர் வைத்துள்ள பெரியாரிஸ்ட் என்று தன்னை சொல்லிக் கொள்கிற வே.மதிமாறன் எழுதியுள்ள பதிவு கீழே உள்ளது.



சங்கிகள் ஏற்கனவே இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் சூழலில் "திமுக" தீவிரவாதி என்று கூட விளிப்பது பொருத்தமற்றது. இவரது மனதுக்குள் ஒளிந்திருக்கும் சங்கித்தனத்தைத்தான் இது காண்பிக்கிறது.

"தீவிரவாதி" என்ற வார்த்தை இஸ்லாமியர்களை ரணப்படுத்தும் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் திரு எம்.எம்.அப்துல்லா பணிவோடு பின்னூட்டமிடுகிறார்.



ஆனால் இதனை தோசைமாறன் கண்டு கொள்ளவேயில்லை. மாறாக பின்னூட்டமிடுவதை கட்டுப்படுத்தி விட்டார்.

இந்த பதிவில் இன்னொரு நக்கலும் உள்ளது.

ஒட்ட"ர்" சத்திரம் என்று எழுதுகிறார்.  சில சாதிகளின் பெயர்கள் "ன்" விகுதியில் முடிவதை "ர்" விகுதியில் மாற்ற வேண்டும் என்று முதல்வர் மத்தியரசுக்கு கடிதம் எழுதியதை இவர் நக்கலடிக்கிறார். ஒட்டன்சத்திரம் என்று ஊரின் பெயரில் இருந்தாலும் அந்த சாதியின் பெயர் "ஒட்டர்" என்றுதான் உள்ளது என்பதை அறியாதவர் அல்ல தோசை மாறன்.

"ன்" விகுதியில் முடியும் சாதிகளில் பெரும்பாலும் பட்டியலின சாதிகள். அவற்றை மாற்ற வேண்டும் என்று முதல்வர் சொல்வது கூட தோசைமாறனுக்கு எரிச்சல் அளித்திருக்கலாம்.

இப்படிப்பட்ட ஆள் ஒரு பெரிய பெரியாரிஸ்டாம் . . .

என்ன கொடுமை சார் இது!!!

No comments:

Post a Comment