Saturday, October 18, 2025

அமித் நிதீஷ் குரங்குக்குளியல்கள்

 


சிவசேனா கட்சியை உடைத்து பாஜக காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்ற ஏக்நாத் ஷிண்டேவிடமிருந்து அடுத்த தேர்தலுக்குப் பின்பு முதல்வர் பதவியை பறித்து துணை முதல்வராக பதவி இறக்கம் செய்தது பாஜக.

மகா கூட்டணி அரசை கவிழ்த்து பாஜக வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார் நிதீஷ் குமார். பீகார் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் "முதல்வர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்வோம்" என்று அமித்ஷா  நேற்று சொன்னதன் அர்த்தம் என்ன?

நிதீஷ்குமார் முதல்வர் வேட்பாளர் மட்டுமல்ல முதல்வரும்  கூட கிடையாது என்பதுதான் அதன் அர்த்தம்.

தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு வாக்காளர் பட்டியலில் நான் திருட்டுத்தனமும் அயோக்கியத்தனமும் செய்வேன், நீ நோகாமல் முதல்வராவதா என்பதுதான் அமித்தின் எண்ணம்.

யார் முதல்வர் என்று சொல்லாமல் 1980 ல் திமுகவும் காங்கிரஸும் சரிசமமாக சட்டபேரவைத் தேர்தலில்  போட்டியிட்டு ஒருவர் காலை இன்னொருவர் இழுக்க மொத்தத்தில் தோற்றுப் போனதுதான் நினைவுக்கு வருகிறது.

நிதீஷை முதல்வரிலிருந்து தூக்கினால் மோடி தூக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இது நடக்காமல் இருக்க ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது.

பாஜக-நிதீஷ் கூட்டணி பீகாரில் தோற்றுப் போக வேண்டும். அப்போது யார் முதல்வர் என்ற பிரச்சினை வராதல்லவா!

ஆகவே மோடியே பீகாரில் குறைவாக பொய் சொல்லவும்,,,,

No comments:

Post a Comment