Wednesday, October 15, 2025

போதைப் பொருள் கடத்திய ஆறு நாள் முதல்வர்


 

ரவி நாயக் எனும் கோவா மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் ரவி நாயக் இறந்து போனார் என்பதை ட்விட்டரில் மோடி எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன்.

பல கட்சிகளுக்கு தாவிய பெருமை கொண்ட ரவி நாயக் இரண்டு முறை கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார்.  

கோவாவிற்லு மாநில அந்தஸ்து கிடைத்த பின்பு 1989 ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு ஐந்து வருடங்களுக்குள் ஏழு முறை முதலமைச்சர்கள் மாறியுள்ளனர்.  இரண்டு பேர் இரண்டு முறை முதலமைச்சராகியுள்ளனர். 

கடத்தலை குடும்பத் தொழிலாகக் கொண்ட ரவி நாயக் முதல் முறை முதல்வரான போது இரண்டு வருடங்கள் முதலமைச்சராக இருந்துள்ளார். இவரைக் கவிழ்த்து விட்டு வில்ஃப்ரெட் டிசோஸா என்பவர் 319 நாட்கள் முதல்வராக இருந்திருக்கிறார்.

வில்ஃப்ரெட் டிசோஸா வை கவிழ்த்து விட்டு மீண்டும் ரவி நாயக்கே முதலமைச்சராகிறார்.

முதலமைச்சரானாலும் குடும்பத் தொழிலை கைவிடக் கூடாது என்று போதைப் பொருட்களை கடத்த  வேலு நாயக்கர் போல அவரே கடலுக்குள் செல்கிறார். கையும் களவுமாக சிக்கிக் கொண்டதால் போலீஸ் அவரை கைது செய்கிறது. 

அதனால் ஆறே நாட்களில் அவரது முதலமைச்சர் பதவி பறி போகிறது.

அதனால் எல்லாம் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போகவில்லை.

பதவி பெறுவதற்காக பல கட்சிகளை பார்த்து விட்டு இறுதியாக பாஜக சென்று வாஷ்ங் மெஷின் துணையோடு உத்தமராகி விட்டார். 

ரவி நாயக்கும் அவரது மகள் ராய் நாயக்கும் போதைப் பொருட்கள் கடத்துவதாக குற்றம் சுமத்தி அவரை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று கூச்சல் போட்ட பாஜகவே ரவி நாயக் பல எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு கூண்டோடு பாஜக தாவிய பின்பு  அமைச்சராக்கியது.

மோடி உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்தது இந்த மனிதனுக்குத்தான்.



அதானால்தான் கவுண்டர் மகான் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"  என்று சொல்லியுள்ளார்.  

No comments:

Post a Comment