மயிலை ரமா எனும் ஜாதி வெறி பிடித்த ஆணவமிக்க, பாஜக மகளிர் அணிப் பொறுப்பாளர் ஒருவரின் மோசமான பதிவொன்றை ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனால் அவர் பக்கத்தைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது அவரின் ஒரு பழைய, மிகக் கேவலமான, அசிங்கமான பதிவு ஒன்றை பார்த்தேன்.
ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியிருந்ததை அந்தம்மா நக்கலடிப்பதாக நினைத்துக் கொண்டு அவருடைய கீழ்த்தரமான புத்தியை வெளிப்படுத்தியிருந்தார். நானும் சூடாகவே ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.
வாச்சாத்தியில் காவல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்திந்திய ஜனநாயகர் சங்கமும் நடத்திய மகத்தான போராட்டத்தின் தளபதி அவர்.
பழங்குடி மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களும் அதிலே அவர் காண்பித்த உறுதியும்தான் அவரை மாநிலச் செயலாளராக உயர்த்தியுள்ளது.
அப்படிப்பட்ட தோழர் சண்முகத்தைப் பற்றி பேச அல்ல நினைக்கக் கூட இந்த பெண்மணிக்கு அருகதை கிடையாது.
மகளி அணிப் பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் அவரின் பதிவுகள் எல்லாமே ஜாதி வெறி எனும் நச்சில் தோய்த்தெடுக்கப்பட்டவைதான்.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் திரைக் கலைஞருமான திருமதி பாத்திமா பாபு இவரை ஒருமுறை கழுவி கழுவி ஊற்றினார்.
இவர் மட்டுமல்ல பாஜகவில் உள்ள எல்லோருமே ஜாதிய மேட்டிமை புத்தியுடன் செயல்படுபவர்கள்தான்.
இவர்களுக்கு கம்யூனிஸ்டுகளின் போராட்டமோ, தியாகமோ, மக்கள் மீது கொண்டுள்ள நேசமோ தெரியாது, புரியாது.
அப்படி புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉன்னோட திருட்டுக் கூட்டாளிக்குதான் நீ சொன்னது பொருந்தும். அவன்தான் யாரிடமும் சொல்லாமல் ஓடிப் போயிட்டான்.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஹூண்டாய் பற்றி கேள்வி கேட்டவரே, நீங்க யாருன்னு சொல்லுங்க, சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் தோழர் அ.சவுந்தரராஜன் அவர்களை கேட்டுச் சொல்கிறேன்.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete