உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் எனும் ஜாதி, மத வெறியன் காலணி வீசிய பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது ஓய்வு பெற்ற நீதிபதி திரு ஹரிபரந்தாமன் ஒரு கேள்வி எழுப்பினார்.
ஆனால் நியாயமான கேள்விதான் என்பதை செவ்வாய்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை நிரூபித்து விட்டது.
ராகேஷ் கிஷோர் மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று தலைமை நீதிபதியே சொல்லி விட்டதால் வழக்கறிஞர் சங்கம் தொடுத்த வழக்கிற்கு அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் சொல்லியுள்ளனர்.
தலைமை நீதிபதி பெருந்தன்மையாக இருக்கலாம். சட்டத்திற்கும் பெருந்தன்மை உண்டா? இழிவு செய்யப்பட்டது திரு கவாய் மட்டும்தானா? உச்ச நீதிமன்றம் இழிவு படவில்லையா? நீதிபதிகளின் மரியாதை இழிவுபடவில்லையா? அரசியல் சாசனம் இழிவுபடவில்லையா?
அதற்கெல்லாம் நடவடிக்கை கிடையாதா?
இது தனி நபர் பிரச்சினை கிடையாது. இதுவே ராகேஷ் கிஷோர் திரு கவாயை வெட்டியிருந்தாலோ கொன்றிருந்தாலோ, இப்படித்தான் நீதிமன்றம் வேடிக்கை பார்க்குமா?
உச்ச நீதிமன்றம் கருணையோடு மன்னிக்க ராகேஷ் கிஷோர் தகுதியானவனா?
தான் செய்தது சரி என்றும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அதே அசிங்கத்தை செய்வேன் என்று சொன்னவனுக்கு மன்னிப்பா?
அவனை மன்னித்தால் ஆயிரமாயிரம் ராகேஷ் கிஷோர் உருவாக மாட்டார்களா?
இப்படிப்பட்ட சூழலில்தான் திரு ஹரிபரந்தாமனின் கேள்வி நியாயம் என்று தோன்றுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை எப்படி இருந்திருக்கும்?
சந்திரசூட் திரு கவாய் போல பெருந்தன்மையாக இருந்திருக்க மாட்டார். ஏனென்றால் அவரே மத வெறி ஊறிப்போனவர்தான். அவரது சமீபத்திய பேட்டிதான் அதற்குச் சான்று.
சரி, நீங்கள் சொல்லுங்கள் யுவர் ஆனர்? முன்னாள் நீதிபதியின் கேள்விக்கு இந்நாள் நீதிபதிகளின் பதில் என்ன?


No comments:
Post a Comment