Wednesday, November 20, 2024

எல்.ஐ.சி – இந்தி – முரண்பாடுகள்

 


நேற்று முன் தினம் முழுதும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்ட விஷயம் எல்.ஐ.சி இணைய தளம் தொடர்பானதுதான். ஊழியர் பணி விதிகளுக்கு கட்டுப்பட்டவன் என்ற முறையில் அது பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை.

 ஆனால் இந்த சர்ச்சையில் நான் கவனித்த ஒரு முரண்பாட்டை சுட்டிக் காட்டவே இந்த பதிவு,

 முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விமர்சனத்தை முன் வைத்த அனைவருமே எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள். ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள். பங்கு விற்பனைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் சமூக வலைத்தளம் உள்ளிட்ட  மக்கள் மன்றங்களில் பேசியவர்கள், எழுதியவர்கள். இன்சூரன்ஸ் பிரிமியம் மீது ஜி.எஸ்.டி கூடாது என்றவர்கள்.

 இவர்களோடு மல்லு கட்டியவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் “பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே பிறந்தவை” என்று சொன்ன மோடியின் ஆதரவாளர்கள். எல்.ஐ.சி யின் பங்கு விற்பனையை வாயில் உமிழ்நீர் வடிய ஆதரித்தவர்கள், இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு ஜி.எஸ்.டி வசூலிப்பது அநியாயமானது என்று ஊழியர்கள் குரல் கொடுத்த போது செவிகளை இறுக்கமாய் மூடிக் கொண்டவர்கள்.

 ஆக அவர்களின் கரிசனம் எல்.ஐ.சி யின் மீதல்ல, இந்தியின் மீது . . .

 

4 comments:

  1. ஐயா
    நியாயத்திற்காக போராடியவர்கள் இன்று இந்நிக்காக குரல் கொடுக்கக் கூடாதா இதில் முரண் எங்கே உள்ளது

    ReplyDelete
    Replies
    1. முரண்பாடு என்று இங்கே நான் சொல்ல வந்தது வேறு. எல்.ஐ.சி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் இந்தி விஷயத்தில் விமர்சித்தார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்பதுதான் என் கருத்து. இந்தி பிரச்சினையில் விமர்சித்தவர்களுக்கு எதிராக பேசியவர்கள் அடிப்படையில் எல்.ஐ.சி க்கும் பொதுத்துறைக்கும் எதிரானவர்கள். இந்த முரண்பாட்டைத்தான் சுட்டிக்காட்டினேன்.

      Delete
  2. இந்தி பற்றிய உங்கள் நிலைப் பாட்டைச் சொல்லுங்கள் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. நான் இந்தித் திணிப்பை எதிர்ப்ப்வன். உங்கள் இன்பாக்ஸை பார்க்கவும்

      Delete