திருப்பரங்குன்றம் தீபத்தூண் புகழ் நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ( IMPEACHMENT MOTION) எடுக்கப் போவதாக "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.
அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல், ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு காவிக் கண்ணாடி அணிந்து கொண்டு தீர்ப்புக்கள் மூலம் கலவரத்துக்கு வித்திடுபவர் நிச்சயம் நீதிபதி பொறுப்பிற்கு தகுதியற்றவர்தான்.
அவரை பணி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் முன்மொழிவு கொண்டு வர்ய்வது மிகவும் நல்ல விஷயம்.
எண்ணிக்கை அடிப்படையில் அந்த தீர்மானம் வெற்றி பெறாது.
ஆனால்
உங்கள் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ள முடியாதது, நீதிபதி பதவிக்கு பொருத்தமற்றது என்று இந்திய ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்றத்தில் பதிவாவது மிகவும் முக்கியமானது.
சரியான முடிவை எடுத்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் . . .

No comments:
Post a Comment