Friday, December 16, 2022

வராக் கடன், வஜா கடன் ????

 


*நாளொரு கேள்வி: 14.12.2022*


தொடர் எண்: *928*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் *க.சுவாமிநாதன்*
#####################

*வராக் கடன் வேறு; வஜா கடன் வேறா?*

கேள்வி: வங்கிகளின் வராக்கடன் (Write off) பல லட்சம் கோடிகள் என்ற செய்திகள் வரும் போதெல்லாம் வராக்கடன் என்பது வஜா கடன் (Waive off) அல்ல என்று நிதியமைச்சர் விளக்கம் கொடுக்கிறாரே! 

*க.சுவாமிநாதன்*

நிதியமைச்சர் வராக்கடன் வரும் போதெல்லாம் இப்படி பொருளாதார வகுப்பு எடுப்பது வழக்கம். ரைட் ஆஃப் என்பது குறிப்பிட்ட காலத்திற்குள் வசூல் ஆகாத கடன்களுக்கு செய்யப்படும் ஒதுக்கீடுதான்;  வராக்கடன் என்று பட்டியல் இடப்பட்டாலும் அக் கடன்களை வசூல் செய்ய முயற்சிகள் தொடரும்; ஆகவே அதற்கு தள்ளுபடி என்று அர்த்தம்  அல்ல என்று விளக்கம் தருவார். 

வராக்கடனில் எவ்வளவு வசூல் ஆகிறது? வசூல் எவ்வளவு... வஜா எவ்வளவு என்ற கணக்கை  மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு நிதியமைச்சகம் பதில் தந்துள்ளது. (இந்து பிசினஸ் லைன் - 14.12.2022).

2017 -18 இல் வராக் கடன் 1,61, 328 கோடிகள். வராக்கடன் வசூல் 12881 கோடிகள். 

2018-19 இல் வராக் கடன் 2,36,265 கோடிகள். வராக்கடன் வசூல் 2505 கோடிகள். 

2019 - 20 இல் வராக் கடன் 2,34, 170 கோடிகள். வராக்கடன் வசூல் 30016 கோடிகள். 

2020 -21 இல் வராக் கடன் 202781 கோடிகள். வராக்கடன் வசூல் 30104 கோடிகள். 

2021 -22 இல் வராக் கடன் 174966 கோடிகள். வராக்கடன் வசூல் 33534 கோடிகள். 

2017- 22 வரையிலான ஐந்தாண்டுகளில் மொத்த வராக்கடன் 10,09,510 கோடிகள். அதே காலத்தில் வசூலான வராக்கடன் 1,09,040 கோடிகள். வரா வேறு வஜா வேறு விளக்கம் தரும் நிதியமைச்சர் அவர்களே, இரண்டுக்குமான இடைவெளி  9,00,470 கோடிகள் இருக்கிறதே! 

ஐந்து ஆண்டுகளில் 11 சதவீதம்  வசூல் ஆகியுள்ளது. 2018 - 19 இல் மட்டும் பார்த்தால் வசூல் வெறும் ஒன்றரை சதவீதம் மட்டுமே. அதிகபட்ச வசூல் இந்த ஐந்தாண்டுகளில் 2021 - 22 இல் ஆகியுள்ள 19 சதவீதம் என்பதே. 

"வரா" என்றால் பெரும்பாலும் "வஜா" என்பதுதானே நடப்பு. வகுப்பில் அதையும் சேர்த்து சொல்லுங்க நிதியமைச்சரே! 

*செவ்வானம்*

No comments:

Post a Comment