Saturday, December 10, 2022

என்னா மேட்சு! என்னா ட்விஸ்டு!

 


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நேற்றுதான் முழுமையாக பார்த்தேன். கால்பந்து விளையாடியவனோ அல்லது அதன் நுணுக்கங்களை அறிந்தவனோ கிடையாது. 1986 ல் மாரடோனாவின் விளையாட்டில் மயங்கி அதன் பின்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பை மட்டும் பார்ப்பவன்.

நேற்றைய இரு காலிறுதிப் போட்டிகளும் கடைசி நொடி வரை பதற்றம் அளித்த போட்டிகள்.

பிரேசில் – க்ரோஷியா போட்டியில் பிரேசில் கை ஓங்கியிருந்தது போல தோன்றினாலும் ஆட்ட நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. கூடுதல் நேரத்தில் 15 வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மர் ஒரு கோல் அடித்தார். அந்த அணிதான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்த போது ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் இருக்கையில் க்ரோஷியா ஒரு கோல் அடிக்க நிலைமை முற்றிலுமாக மாறியது.

பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசிலின் கோல் கீப்பரை விட க்ரோஷியாவின் கோல் கீப்பர் சிறப்பு. அதனால் பிரேசில் வெளியேற க்ரோஷியா அரை இறுதி ஆட்டத்திற்கு சென்றது.

இன்னொரு காலிறுதி ஆட்டமான அர்ஜெண்டினா-நெதர்லாந்து போட்டியில் அர்ஜெண்டினா கை ஓங்கியிருந்தது, தாக்குதலிலும், அதாவது எதிர் அணி வீரர்களை உடல் ரீதியாக தாக்குவதிலும்.

இரண்டு கோல்களோடு முன்னணியில் இருந்த அர்ஜெண்டினா எதிர்பாராத தருணத்தில் நெதர்லாந்து முதல் கோலை அடித்தது. அர்ஜெண்டினாவின் முரட்டு ஆட்டம் நெதர்லாந்துக்கு இரண்டாவது கோலையும் பெற்றுத் தந்தது.

கடைசியாக பெனால்டி ஷூட் அவுட்டிலும் கடைசி கிக் வரை யார் அடுத்த சுற்றுக்கு போவார்கள் என்ற பதற்றம் இருந்தது. தப்பி பிழைத்தது அர்ஜெண்டினா.

நேற்றைய போட்டிகள் சொல்லும் செய்தி ஒன்றுதான்.

வெல்ல முடியாதவர்கள், வலுவானவர்கள் என்று யாரும் கிடையாது. இறுதி நேரத்தில் கூட எதுவும் மாறலாம்.

அதனால் குஜராத் முடிவுக்காக சோர்வடைய வேண்டாம். மாற்றம் நிச்சயம் என்ற நம்பிக்கையோடு செயல்படுவோம்.

No comments:

Post a Comment