சங்கிகள்
பெரும்பான்மையாக உள்ள ஒரு முகநூல் குழு மத்யமர். மோடி ஜால்ரா ரொம்பவும் ஓவராகவும் மற்ற
எதிர்க்கட்சிகளை தரக்குறைவாக எழுதுவது அதை விட ஓவராகவும் போனதால் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட
விவகாரத்தில் சங்கிகளின் ஆபாச வார்த்தைகள் அளவின்றி போனதால் ஒரு கட்டத்தில் அந்த குழுவே
முடக்கப்பட்டது.
அந்த
குழு பின்பு மீட்கப்பட்ட பின்பு அங்கே அரசியல் பதிவுகளுக்கு அனுமதி கிடையாது. பெரும்பாலும்
சமையல் குறிப்பு, கோலம், ஆன்மீகச் சுற்றுலா என்று பதிவுகள் இருக்கும். வேலூர் சிப்பாய்
புரட்சி பற்றிய எனது ஒர் பதிவு கூட வினோதமான காரணம் சொல்லி அனுமதி மறுக்கப்பட்டது.
அந்த
விவகாரம் குறித்த பதிவின் இணைப்பு இங்கே.
மத அடையாளம் மறந்தால் மத்யமருக்கு ??? என்ற பதிவின் இணைப்பு இதுதான் . . .
அரசியல்
விவகாரங்களை எழுதுவதற்காகவே அவர்கள் மத்யமர் அரசியல் என்று ஒரு குழு உருவாக்கினார்கள்.
நம்ம ரத்த அழுத்தத்தை நாமே அதிகரித்துக் கொள்ள வேண்டுமா என்று அதில் இணையவில்லை.
ஒரு
தகவலை சரி பார்க்க இரண்டு நாட்கள் முன்பாக இணைந்தேன். அந்த குழுவின் பெயரை “மத்யமர்
அரசியல்” என்பதற்குப் பதிலாக “மத்யமர் ஆட்டுக்காரன்” என்று மாற்றி விடலாம் என்ற அளவிற்கு
ஒரே ஆட்டுக்காரன் புகழ்தான், ஆட்டுக்காரன் சாகஸங்கள் என்ற கட்டுக்கதைகள்தான்.
ஆட்டுக்காரன்
என்ற டம்மி பீஸை ஆஹோ, ஓஹோ என்று புகழ்கிறவர்கள் எவ்வளவு பெரிய டம்மி பீஸ்களாக இருப்பார்கள்!
பவர்
ஸ்டார், ஜெஜெண்ட் சரவணனின் படங்கள் ரேஞ்சிற்கு கலகத் தலைவன் படத்தை மட்டம் தட்டிக்
கொண்டிருந்தவர்களின் பதிவில்
கலகத்தலைவன் - பார்க்கலாம்
என்ற பதிவின் இணைப்பை கொடுத்ததும்
அடுத்த சில நிமிடங்களிலியே வெறி நாய் போல பாய்ந்து வந்து விட்டார்கள்.
இருப்பினும்
காமெடி Content கிடைக்க வாய்ப்புள்ளதென்பதால், பதிவெழுதாமல், பின்னூட்டம் இடாமல் ஒரு
ஸ்லீப்பர் செல்லாக அந்த குழுவில் இன்னும் கொஞ்ச காலம் நீடிக்கலாம் என்று யோசிக்கிறேன்.
என்ன சொல்லியிருப்பாங்க!
ReplyDeleteஎங்க ஆட்டுக்காரர், கெடா ஆட்டுல பால் கறந்து காந்திக்கு குடுத்தவர்னு சொல்லியியிருப்பாங்க.