Monday, December 12, 2022

காசி தமிழன்னையும் கருப்புதான்

 


 கீழே உள்ள படங்கள் காசி தமிழ்ச் சங்கமத்திற்கு சென்ற ஒருவர் முக நூலில் பகிர்ந்து கொண்ட, அங்கே நிறுவப்பட்டுள்ள தமிழன்னையின் சிலையின் படங்கள்.

 



ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட தமிழணங்கு படத்தில் தமிழ்த்தாயை கருப்பாக வரைந்து அவமானப் படுத்தி விட்டார்கள் என்று ஆட்டுக்காரன், எச்.ராசா வகையறாக்கள் குதித்தார்கள்.

 இதோ, இப்போது மோடியும் மொட்டைச்சாமியாரும் அமைத்துள்ள சிலையிலும் தமிழன்னை கருப்பாகத்தான் இருக்கிறார்.

 தமிழன்னையை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று தமிழ்நாட்டு சங்கிகள் இப்போது மோடிக்கும் மொட்டைச் சாமியாருக்கும் எதிராகவும் பொங்குவார்களா? 


அவர்களுக்கு பிரச்சினை தமிழணங்கு கருப்பாக இருந்ததில்லை. அதனை வெளியிட்டது ரஹ்மான் என்பதுதான்.                                                                                                                                                           

2 comments:

  1. இது தமிழன்னையின் சிலை இல்லை தோழர்... பாரதமாதாவின் சிலை. இது காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு தமிழன்னைக்கு என்ன வேலை...?

    ReplyDelete
    Replies
    1. அங்கே போய் வந்த ஒருவரின் பதிவிலிருந்து எடுத்தது அந்த படம். பரவாயில்லை பாரத மாதாவும் கருப்பு என்பது மகிழ்ச்சியே

      Delete