Friday, December 2, 2022

அது சாவர்க்கர் மன்னிப்பல்ல . . .

 


மோடி விளம்பரம் செய்த, மொட்டைச்சாமியார் உள்ளிட்ட பாஜக முதல்வர்கள் வரி விலக்கும் விடுப்பும் கொடுத்த "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றிய கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழுவின் தலைவர் நடவ் லேபிட் மன்னிப்பு கேட்டு விட்டார் என்று சங்கிகள் புளகாங்கிகத்தோடு ஒரு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அச்செய்தி உண்மையா?

அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்? என்பது போல சங்கிகள் என்றைக்கடா உண்மை பேசியிருக்கிறார்கள் என்ற உங்கள் குரங்குக் குளியல் எனக்கு கேட்டு விட்டது.

அவர் சங்கிகளின் பிதாமகர்கள் செல்ஃபி சாவர்க்கரோ, ஆர்.எஸ்.எஸ் தேவரஸோ இல்லை, சர்வ சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்க . .

"காஷ்மீரில் பாதிக்கப்பட்ட பண்டிட்டுகள் யாருக்காவது நான் சொன்னது மனதை புண்படுத்தி இருக்குமானால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரம் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தைப் பற்றிய எங்கள் தேர்வுக் குழுவின் கருத்தின் எந்த மாற்றமும் இல்லை. வெறுப்புணர்வை தூண்டும் இழிவான பிரச்சாரப் படம் அது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" 

என்றுதான் அவர் கூறியுள்ளார்.

சர்ச்சையே அவர் திரைப்படம் பற்றி கூறியதுதான். அந்த கருத்தில் மாற்றம் இல்லை என்று சொல்கிற போது மன்னிப்பு கேட்டார் என்பதே அபத்தமானதல்லவா!

என்ன! தாங்கள் அடி முட்டாள்கள் என்பதை சங்கிகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள். அவ்வளவுதான் . . .


No comments:

Post a Comment