இந்தத்
தலைப்பை படிக்கும் போதே ஆன்மீகவாதிகள் சிலருக்கு சுருசுருவென்று கோபம் வரும்.
ஆனால் வேறு வழியில்லை. நான் பார்த்த காட்சிகளை இங்கே கண்டிப்பாக பதிவு செய்தாக
வேண்டும். அதற்கு இதைத்தவிர வேறு பொருத்தமான தலைப்பு கிடையாது என்பதை
படிப்பவர்களின் மனசாட்சி கண்டிப்பாக ஒப்புக்கொள்ளும்.
வட
நாட்டிலிருந்து இறக்குமதியான பிள்ளையார் பெரு உருவச்சிலை, அதைக் கடலிலோ அல்லது
ஆற்றிலோ அல்லது குளம் ஏரியிலோ கொண்டு சேர்க்கும் விஸர்ஜன ஊர்வலம் இது எல்லாமே
பக்தியின் அடிப்படையிலானது அல்ல, சங் பரிவார அமைப்புக்களின் அரசியல் நாடகம்
என்பதும் அதற்கு அப்பாவிகள் பலர் இரையாகி வருகின்றனர் என்பது எனது உறுதியான
நிலைப்பாடு. இதுதான் உண்மையும் கூட.
இந்த ஆண்டு
இருபத்தி ஒன்றாம் தேதி கடலூர் சென்றேன். வேலூர், திருக்கோயிலூர், பண்ருட்டி,
கடலூர் ஆகிய இடங்களில் அன்றுதான் வினாயகர் ஊர்வலம். குட்டி யானை லாரிகளிலும்
ட்ராக்டர்களிலும் வினாயகர் ஏற்றிக் கொண்டு வரப்படுகின்றார். அந்த வாகனம் முழுதும்
இளைஞர்கள். அத்தனை இளைஞர்களும் குடி போதையில்தான் உள்ளனர். போதையில் வெறிக்
கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.
அத்தனை
ஊர்களிலும் அத்தனை பிள்ளையார்களோடும் நான் பார்த்த காட்சி இது. பக்தி உச்சத்திற்கு
ஏறி நிச்சயமாக இப்படி நடந்து கொள்ளவில்லை. இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக
திட்டமிட்டு போதையேற்றப்படுபவர்கள்.
இவர்கள் மற்ற
நாளெல்லாம் கோயில்களுக்குச் செல்வார்களா என்பது கூட சந்தேகம். ஏற்கனவே தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்
ஆக்கிரமிப்பிற்கு சென்று கொண்டுள்ள வேளையில் இது போன்ற உசுப்பேற்றும் வேலைகள்
நிச்சயம் தமிழகத்திற்கு ஆரோக்கியமான ஒரு போக்கு அல்ல.
உண்மையான
கடவுள் நம்பிக்கையாளர்கள் இதனை முறைப்படுத்துவார்களா?
muraipaduththa mudiyaadhu, appadi muraipaduththa virubinaal ippadi oru kaariyaththai seiyyamaataargal nandri
ReplyDeletesurendran
பிரச்னை தமிழ்நாட்டிலேயே இருக்கு.இனி என்ன விழா என்றாலும் தண்ணி இல்லாமல் தொடங்காது தண்ணி இல்லாமல் முடியாது போலிருக்கு.இந்த விநாயகர் ஊர்வலத்தில் நடுத்தரவர்க்கம் கலந்துக்கவே கலந்துக்காது கவனித்தீர்களா...நிறைய குறைந்து விட்டது.அப்படியே இன்னும் குறையும். வீட்டில் சிறு பிள்ளையார் வாங்கி வழிபடுவதுதான் தொடரும்...
ReplyDelete