இறப்பிலும் ஆதாயம் தேடும் அற்ப புத்தி கொண்ட
ஆளும் கட்சியினரின் அரசியல் கண்டு கோபப் பட்ட
ஒரு நண்பர் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பி
அதன் நகலை எனக்கு அனுப்பியிருந்தார். அவரது
கோபம் எனக்கும் வருகின்றது. எனவே அக்கடிதத்தை
இங்கே பதிவு செய்கிறேன்.
ஆளும் கட்சியினர் அவருக்கு எந்த பிரச்சினையும்
அளிக்கக் கூடாது என்பதால் அவரது பெயர் மற்றும்
விலாசத்தை போடவில்லை, முதல்வருக்கான
கடிதத்தில் அவர் தைரியமாக எழுதியிருந்த போதிலும்.
--------------------------------------------------------------------------------------------------
உண்மையுள்ள,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மாவுக்கு,
தமிழர் மரபுப்படி வணக்கம் செலுத்துகிறேன்.
இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி குறித்தும் அதன் புகைப்படமும் கண்டு வேதனைப்பட்டேன். சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் பலியான குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க சென்ற அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் ஒரு சிறுமி எங்கள் அப்பா வேண்டும் என்று அழுததாக செய்தி வந்தது. அதே செய்தியில், அமைச்சர் ஒரு காசோலை போன்ற பத்திரம் வழங்குவதும், அதில் உங்கள் படம் நன்றாக தெரிய அமைச்சர் பன்னீர் செல்வம் போஸ் பெரும் சிரமப்பட்டு கொடுத்துள்ளார். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் இப்படி ஒரு மூத்த அமைச்சர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலே கண்ணும் கருத்துமாக இருக்கலாமா? உங்களுக்கு பின் வருங்காலத்தில் முதலமைச்சர் என்று வர்ணிக்கப்படும் ஒருவர் பொது இடத்தில், அதுவும் துக்கமான சம்பவத்தில் இங்கிதம் தெரியாமல் நடந்து கொள்வது கண்டிக்க தக்கது.
பொதுவாக உங்கள் கட்சிகாரர்கள் போலி விசுவாசத்தை கட்சி சம்பந்த கூட்டங்களில் , சட்டசபையிலும் காட்டுவார்கள் என்று கடுமையான விமர்சனம் உண்டு. நான் எந்த கட்சியை சார்தவனும் இல்லை. ஆனால், துக்க வீட்டில் கட்சிக்கு விளம் பரம் தேடுவது அருவருக்க தக்கது. தகுந்த அறிவுரை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
உண்மையுள்ள,
No comments:
Post a Comment