Sunday, September 2, 2012

அமைச்சரைக் க்ண்டேன், அதிர்ந்தே போனேன்....



எங்கள் சங்கப் பொறுப்பாளர் ஒரு தோழரின் மகனின்
திருமணத்திற்காக நேற்று சென்னைக்கு காரில்
சென்றோம். வழியில் ராணிப்பேட்டையில் ஒரு
கடையில் டீ சாப்பிட்டு விட்டு புறப்படத் தயாரான போது
தமிழகத்தின்  இன்றைய (நாளை அமைச்சராய் இருப்பாரா
என்பது அவருக்கும் தெரியாது, அம்மாவ்விற்கும் தெரியாது)
அமைச்சர் திரு முகமது ஜான் அதே கடைக்கு காரில் வந்தார். 

அந்த காரின் உள்ளே பார்த்தால் மிகப் பெரிய அதிர்ச்சி.
உள்ளே புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் மட்டும் சிரித்துக்
கொண்டிருந்தார். என்ன தைரியம் அந்த மனிதருக்கு!
அம்மா படம் இல்லாமல் அமைச்சரின் காரா? என்று
பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு நிமிடம்தான்.

உள்பக்கம் எம்.ஜி.ஆர் படம் என்றால் வெளிப்பக்கம்
ஜெ இருந்தார். பிறகு பேசிக்கொண்டோம். இப்படி
அதிமுக ஆட்களைப் பற்றி தவறாக நினைத்து விட்டோமே
என்று  சொல்லிக் கொண்டிருந்த போதே அடுத்த கேள்வி
வந்தது.

ஜெ படத்தை ஏன் உள் பக்கம் வைக்காமல் வெளிப்பக்கம்
வைத்துள்ளார்?

நேரிலோ அல்லது புகைப்படத்திலோ அம்மா எதிரில்
இருந்தால் அதிமுக அமைச்சர்களால்  சீட்டில் உட்கார
முடியுமா? ஏசி காராக இருந்தாலும் வியர்த்துப் போகாதா?
பி.பி எகிறாதா?

ஆகவே அமைச்சரிடம் எந்த தவறும் கிடையாது.
எனவே இதற்காக அவர் பதவியை நீக்க வேண்டாம் என்று
ஜெ வைக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment