Monday, September 8, 2025

பத்துக்கும் போக மாட்டார் மோடி

 


காலத்தே செல்லாமல் கழுத்தறுத்து விட்டு, பின்பு நானும் இருக்கிறேன் நண்டு வளையில் என்று சீன் போடுபவர்களை "செத்ததுக்கு வாடான்னா பத்துக்கு வந்திருக்கே" என்று கேட்பது தமிழ் மக்களின் பழக்கம். இது ஜீன்ஸ் படத்தில் ஒரு காட்சியாகவே வந்திருக்கும்.

உயிரிழப்பு, பொருளிழப்பு, சொந்த வீட்டை விட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் இன்னும் வாழ்க்கை,  உலகமே காறி உமிழ்ந்த பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை என்று மிக மோசமான மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. நிலைமை இன்னும் சீராகவில்லை என்பது வேறு விஷயம்.

இது நாள் வரை மணிப்பூர் செல்வது பற்றி யோசிக்காத 56 இஞ்சார், இப்போது மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்தது.

பக்கத்தில் உள்ள மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் பச்சைக் கொடி ஆட்டுதல், ரிப்பன் வெட்டுதல் ஆகிய போட்டோ ஷூட் நிகழ்வுகள் இருப்பதால் மணிப்பூருக்கும் போய்த் தொலைக்கலாம் என்று முடிவு செய்திருக்கலாம்.

அதனால் குகு இன அமைப்புக்களோடு ஒரு ஒப்பந்தம் கூட உருவானது. அது ஒன்றும் பெரிய ஒப்பந்தம் என்று சொல்ல முடியாது. பிரச்சினைகள் தொடர்பாக பேசலாம் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

ஆனால் அதை நிராகரிப்பதாக பெரும்பான்மை மெய்தி இன அமைப்புக்கள் நிராகரித்து விட்டன.

அவர்களை மீறி மோடி மணிப்பூர் வருவதோ சிறுபான்மை மக்களான குகு பழங்குடி மக்களோடு பேசுவதோ நடக்கவே நடக்காது.

ஆக போட்டோ ஷூட்டுக்கள் வேண்டுமானால் நடக்கலாம். மணிப்பூர் செல்வதெல்லாம் . . . .




No comments:

Post a Comment