அஸ்ஸாம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ளது. அதனால் அங்கே மக்களை பிளவு படுத்த விஷம் கக்குவதை மோடி தொடங்கி விட்டார்.
வட கிழக்கு மாநிலங்களில் ஊடுறுவல்கள் அதிகமாகி விட்டதாகவும் அதனால் அந்த மாநிலங்களில் சிறுபான்மை மதத்தினர் அதிகமாகி விட்டதாகவும் பெரும்பான்மை மதத்தினரான இந்துக்களின் எண்ணிக்கையை விட மற்றவர்கள் அதிகமாகி விட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி இந்த ஊடுறுவல்களை வாக்குகளுக்காக வேடிக்கை பார்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்,
மத்தியில் பாஜக 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அநேகமாக அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் பாஜகதான் தேர்தலின் மூலமாகவோ அல்லது வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கியோ ஆட்சியில் உள்ளது.
சமீப ஆண்டுகளில் ஊடுறுவல் அதிகமாகி உள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையோ புள்ளி விபரத்தையோ மோடி தரவில்லை. வழக்கம் போல வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார்.
ஊடுறவல் அதிகமாகி உள்ளதென்றால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பாஜகவின் மத்தியரசும் மாநில அரசுகளும் தோல்வி அடைந்துள்ளது என்பதுதானே அர்த்தம்!
தன்னுடைய தோல்விக்கு அடுத்தவர்கள் மீது பழி போடுவது என்ன நியாயம்?
தேர்தல் ஆதாயத்திற்காக மத வெறி நச்சை உமிழும் கேவலமான உத்தியை மோடி துவக்கியுள்ளார்.
பிரதமர் என்ற பொறுப்பிற்கு கொஞ்சமும் தகுதியற்றவர் என்பதைத்தான் அவரது விஷப்பிரச்சாரம் காண்பிக்கிறது.
பிகு: இன்னொரு பொய்யும் மோடியால் சொல்லப்பட்டுள்ளது. அது நாளை.
No comments:
Post a Comment