நேற்று முன் தினம் போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவிற்கும் போலி தேச பக்தர் மோடிக்கும் உள்ள ஒற்றுமைகளை மோடிக்கும் ஜக்கிக்கும்தான் பொருத்தம் என்ற பதிவில் பட்டியலிட்டிருந்தேன்.
அதற்கு தேச நேசன் என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது.
அதை கீழே கொடுத்துள்ளேன்.
தேச நேசன்February 23, 2017 at 2:57 PM
என்ன
இது? ஏன் திரு மோடி என்றால் மட்டும் இப்படி ஒரு கொடூரம். இது
புடிக்கலையை.. தாராளமா நாட்டை விட்டு வெளியேறுங்கள். தேசவிரோதமா இப்படிலாம்
எழுதாதீர்கள். தேச விரோதிகள் நீங்கள்.
அதற்கு நான் பின்வரும் பதிலை கொடுத்தேன்.
யார் அந்த தேச நேசன் என்று தேடிப் போய்ப் பார்த்தால் அந்த இணைப்பு நேரடியாக தின மலர் இணைய தளத்திற்குத்தான் செல்கிறது.
தேச நேசன்
மேலே கொடுக்கப்பட்ட இணைப்பை சொடுக்குங்கள். அது நேராக தின மலருக்குத்தான் செல்கிறது.
நினைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம். சுதந்திரப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த சங் பரிவார துரோகிகளை தூக்கிப் பிடிக்கிற தின மலர் பத்திரிக்கை, தேச நேசன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டு விஷம் கக்குவதற்குப் பதிலாக "இந்து நேசன்" என்ற பெயரை வைத்துக் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
நினைவில் இருக்கிறதல்லவா?
அந்த காலத்தில் லட்சுமிகாந்தன் (பாகவதர், என்.எஸ்.கே வழக்கு) நடத்திய மஞ்சள் பத்திரிக்கையின் பெயர் "இந்து நேசன்"