மோடி அரசின் ஜனநாயக விரோத அணுகுமுறைக்கு இந்த சம்பவம் இன்னொரு உதாரணம். நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சையே அழிக்கிறவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
காவிக்கூட்டம் எந்த அளவிற்கும் கீழே இறங்கும்.
என்னுடைய வார்த்தைகள் எங்கே போயின?
மாநிலங்களவையில்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
அப்போது
அவரது உரையில் சில வரிகள், குறிப்பாக, நரேந்திர மோடி அரசாங்கத்தைக்
கடுமையாக விமர்சித்த வரிகள்- அவையில் அவர் பேசும்போது அவைத்தலைவரால்
நீக்கப்படாத நிலையிலும் - அச்சாகிவெளிவந்த குறிப்பேட்டில்
நீக்கப்பட்டிருந்தன.இதற்கு எதிராக சீத்தாராம் யெச்சூரிமுறையீடு
செய்திருக்கிறார்.
நாடாளுமன்ற
ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியம் நான்கு ‘D’-க்கள் என்று கூறி, debate,
discussion, decision and not destruction என்று ஜனாதிபதி
குறிப்பிடுகிறார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நான்கு ‘டி’க்களும்
இப்போதுஇல்லை.
மாறாக
வேறு நான்கு‘D’-க்களில் நரேந்திரமோடி அரசாங்கம் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறது. அவை ‘deception’(வஞ்சகம்) ,‘disruption’ (சீர்குலைவு),
‘diversion’(திசைதிருப்புதல்) மற்றும் ‘diabolic agenda’(பேய்த்தனமான
அல்லது கொடிய நிகழ்ச்சிநிரல்) ஆகியவைகளாகும்’’ என்று சீத்தாராம் யெச்சூரி
பேசியிருந்தார்.
இவ்வாறு யெச்சூரிபேசும்போது அவைத்தலைவராலோ அல்லது அரசுத்தரப்பிலோ எவ்வித ஆட்சேபணையும் எழுப்பப்படவில்லை.
ஆனால் அச்சிட்ட அவைக்குறிப்பு வெளியானதைக் கண்ணுற்றபோது, அதில் இந்த வரிகள் அவைத்தலைவரால் நீக்கப்பட்டிருந்தன.
இதனை
ஆட்சேபித்து கடந்த செவ்வாயன்று சீத்தாராம் யெச்சூரி அவையில்
இந்தப்பிரச்சனையை எழுப்பினார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக
முறையீட்டையும் தாக்கல் செய்தார்.பின்னர் மாலையில், நீக்கப்பட்டவரிகள்
மீண்டும் சேர்க்கப்பட்டுவிட்டன.
ஆயினும்
சீத்தாராம் யெச்சூரி, “அவைத்தலைவரால் நீக்கப்படாத போது அந்த வரிகளை
நீக்கிடக் கட்டளையிட்டது யார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி - தீக்கதிர் 12.02.2017
copy paste mistake....only sir....
ReplyDeleteTheir intention was to hide his criticism
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteAnother DDDD Attempt by a Sanghi deleted
DeleteAnother DDDD Attempt by a Sanghi deleted
DeleteAnother DDDD Attempt by a Sanghi deleted
Delete