முதலில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஜெ சமாதியில் நாற்பது நிமிடம் ஆடாமல் அமர்ந்திருந்து ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை தன் மேல் குவிக்க வைத்ததும் அதன் பின்பு அளித்த பேட்டியும் பன்னீர் அடித்த மிகப் பெரிய சிக்ஸர் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
பன்னீரின் பின்னே இருந்து பாஜக இயக்குகின்றது என்பதற்கு கவர்னரின் தலை மறைவையும் அடுத்த வாரம் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் என்ற அறிவிப்பையும் நம்மால் சொல்ல முடியும்.
பாஜக பாரம்பரியப்படி எச்.ராசா போன்றவர்கள் ஓ.பி.எஸ்ஸை ஆதரிப்பது போல காண்பித்துக் கொள்ள சுனா.சாமி சசிகலாவுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார்.
பாஜக விற்கும் பன்னீரின் அதிரடிக்கும் சம்பந்தம் கிடையாது என்றுதான் சசிகலா சொல்கிறார். பாஜக காரணமாக இருக்கலாம் என்று சொல்லக் கூட அவர் தயங்குகிறார்.
ஸ்டாலினைப் பார்த்து சிரித்தார், அவரும் இவரைப் பார்த்து சிரித்தார் என்று உப்பு சப்பில்லாமல் ஏதேதோ சொல்கிறாரே தவிர மத்தியரசு பற்றி வாய் திறக்க அவர் தயாராக இல்லை. எங்களுக்கும் பன்னீருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று ஸ்டாலினும் சொல்கிறார்.
அப்படியானால் பன்னீரை இயக்குவது யார்?
ஜெ வின் ஆன்மா வந்துதான் பதில் சொல்ல வேண்டுமோ?
அப்படி வந்து சொன்னால் அப்பல்லோவில் நடந்தது என்ன என்பதையும் கேட்டு சொல்லுங்கப்பா.
ஆனால் ஒன்று சசிகலா வகையறாக்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
சசிகலா வகையறாக்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. golden words
ReplyDelete