Thursday, June 28, 2012

சென்னை பேருந்து விபத்து - மறைக்கப்படும் உண்மைகள். நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு ஓட்டுனர் பலிகடாவா?


 

 சென்னை பேருந்து விபத்து தொடர்பாக நிர்வாகம், காவல்துறை,
ஊடகங்கள் உட்பட அனைவரும் ஓட்டுனரை குற்றவாளியாக்கி
தீர்ப்பு வழங்கி விட்டனர். தண்டனை அளிக்காதது மட்டும்தான்
பாக்கி.


விபத்திற்குள்ளான பேருந்து பற்றிய லட்சணம், இன்றைய 
தீக்கதிர் நாளிதழில் வந்துள்ளது. அரசுப் பேருந்துகள் எந்த
அளவிற்கு மோசமாக பராமரிக்கப்படுகின்றது என்பது அனைவரும்
அறிந்ததே. 


பல சமயங்களில் உதிரிப்பாகங்களை ஓட்டுனரே தனது சொந்தப்
பணத்தில் மாற்றுவது என்பது வழக்கமான நடைமுறையாகி 
விட்டது. பல அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் அவஸ்தை பஸ்களாகத்தான்
உள்ளது.


சாதாரணப் பேருந்துகள் எவ்வளவு மோசம் என்பது என்னைப் போல
அடிக்கடி பயணம் செய்பவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும்.


போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக சீர்கேட்டிற்கும்
 அலட்சியத்திற்கும்   உதாரணமாக ஒரு அதிர்ச்சியளிக்கும் உண்மை
ஒன்று உண்டு. அது நாளை.


இப்போது தீக்கதிர் செய்தியை படியுங்கள். மற்ற நாளிதழ்களும்
மறைத்த உண்மை இது.



சென்னை, ஜூன் 27 -
சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து மாந கர பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளா னதில் 40பேர் காயமடைந் தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.பாரிமுனையில் இருந்து வடபழனி நோக்கி 17எம் பேருந்து சென்று கொண் டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் பிரசாந்த் இயக்கி னார். மதியம் 1.45மணி அள வில் அண்ணா மேம்பாலத் திலிருந்து கோடம்பாக்கம் சாலைக்கு செல்ல கீழே இறங்கும் போது, பேருந்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவற்றில் உரசியது. பின்னர் பேருந்து ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து பாலத் தின் தடுப்பு சுவற்றை உடைத் துக் கொண்டு கீழே உருண்டு விழுந்தது. சுமார் 10 அடி உயரத்தில் இருந்து விழுந்த பேருந்தினுள் இருந்த ஓட்டுநர், நடத்து நர், பயணிகள் என சுமார் 40பேர் காயமடைந்தனர்.


விபத்து நிகழ்ந்த பகு திக்கு அருகிலேயே இருந்த தீயணைப்பு நிலையத்திலி ருந்து வந்த தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கி யவர்களை மீட்டு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணியின் போது தீயணைப்பு படை வீரர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.இந்த விபத்து நடந்ததற் கான உண்மையான கார ணத்தை போக்குவரத்து கழக நிர்வாகம் மூடிமறைக் கிறது. இருச்சக்கர வாகனங் கள் கூட வேகமாக செல்ல முடியாத அந்த வளைவில், ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியதால் தான் விபத்து நிகழ்ந்துள் ளது என்று நிர்வாகம் கூறு கிறது.சிறுகாயம் கூட ஏற் படாத ஒருவர் பயணி என்ற போர்வையில், ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டு பேருந்தை இயக் கினார் என்றார். மற்றொரு முறை கூறும் போது, ஓட் டுநர் செல்போனை கையில் வைத்திருந்ததை பார்த்தேன் என்றார். இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல் களை அவர் கூறினார்.விபத்துக்கு காரணம் என்ன?இது தொடர்பாக வட பழனி பணிமனையில் பணி யாற்றும் ஓட்டுநர் ஒருவர் கூறியது வருமாறு:வடபழனி பேருந்து நிலையத்திற்குட்பட்ட இந்த பேருந்தின் (விபிஐ-0615, டிஎன்-01, என்-4680) ஃபாடி கோணலாக இருந் தது. வேறொரு பேருந்தினு டைய பேனட் பெட்டியின் மூடியை எடுத்து இந்த பேருந்தின் பேனட்டை மூடி வைத்திருந்தனர். ஓட்டுநரின் இருக்கை பாதி உடைந்து இருந்தது. 


கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பராமரிப்பின்றி அந்த பேருந்து இருந்துள்ளது.பேருந்தின் டயர் பயன் படுத்த முடியாத நிலையில் இருந்தது. அதனை மாற்ற வேண்டுமென்பதற்கு அடை யாள குறியீடும் இடப்பட் டிருந்தது. இந்த பேருந்தை இயக்குமாறு ஓட்டுநர்களை பணிமனை நிர்வாகம் நிர் பந்தித்து வந்தது. ஓட்டுநர்க ளும் அந்த பேருந்தை இயக்க மறுத்துவந்தனர். இருப்பி னும் தொடர்ந்து நிர்வாகம் அளித்த நிர்பந்தம் காரண மாக வேறுவழியின்றி அந்த பேருந்தை ஓட்டுநர் பிர சாந்த் இயக்கினார்.அண்ணா மேம்பால வளைவில் அவர் பேருந்தை ஓட்டிச் செல்லும் போது கோணலாக இருந்த பாடி பக்கவாட்டுச் சுவறின் மீது உரசியது. இருப்பினும் ஓட்டுநர் பேருந்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கடுமையாக முயற்சித்துள்ளார். அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கை முற்றிலுமாக உடைந்தது. இதனால் ஓட்டு நர் நிலைதடுமாறினார். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றை உடைத் துக் கொண்டு கவிழ்ந்தது. இந்த விபத்திற்கு நிர்வாகம் தான் முழு பொறுப்பு. இனி யேனும் நிர்வாகம் பயணி கள் உயிரோடு விளையா டாமல் தகுதி வாய்ந்த பேருந் துகளை இயக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறி னார்.

5 comments:

  1. சார் ஒரு தொழிற்சங்கவாதியா இப்படித்தான் பேச முடியும். வேறென்ன சொல்ல.

    உங்களுக்கு நிறைய பேரை தெரிந்திருக்கும், கடலூர் ஓ.டி காவல் நிலையத்தில் விசாரிக்க முடிந்தால் கேட்கவும், குடித்து வீட்டு பேருந்தை இயக்கிய அரசு ஓட்டுநர், பிளாட் பார்ம் மீது கொண்டு ஏற்றிவிட்டார். பயணிகளே போலிசில் பிடித்துக்கொடுத்தோம், எங்களை மாற்று பேருந்தில் ஏற்றிவிட்டு , அனுப்பிவிட்டார்கள். இச்சம்பவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்தது.

    ReplyDelete
  2. இருக்கை உடைந்ததனால் இந்த விபத்து என்று மற்ற ஒரு செய்தி தாளிலும் வந்தது.. இப்படியே பிரச்சனைகளை களையாமல் சின்ன சின்ன காரணங்களை கண்டுபிடித்து எத்தனை நாள் தான் அரசு இவற்றை தள்ளி போட்டு கொண்டே வரப்போகிறது? இப்படியே கொண்டு போய் கடைசியில் பராமரிப்பு செலவுகள் மிக அதிகமாகி விட்டதால் தனியார் மயம் ஒன்றே தீர்வு என்று 'கண்டுபிடித்து' விடுவார்கள்!

    ReplyDelete
  3. ஒரு தொழிற்சங்கவாதி என்றாலே ஒரு தொழிலாளி என்ன தப்பு செய்தாலும் பேசாமல் சப்போர்ட் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாதவிதியாக கொள்ளாதீர்.. ஓட்டுனர் விபத்து நடப்பதற்கு முன்பின் செல் பேசியதற்கான ஆதாரம் இருப்பதாக தினதந்தி கூறுகிறது.. அவர்களுக்கு எந்த ’கலரும்’ கிடையாது...

    ReplyDelete
  4. DEAR SIR,

    DRIVER AND CONDUCTOR HAVING MORAL RESPONSIBLE FOR PASSENGER SAFETY.
    IF THEY ARE NOT SATISFIED WITH THE CONDITION OF THE VEHICLE WHY THEY TAKEN THE VEHICLE OUT. FOR LOT OF REASON YOUR PEOPLE DOING A STRIKE WHY NOT YOU CONDUCT A DHARNA FOR THIS.

    ONLY FOR COOOLEEE YOU PEOPLE ARE THREATENING THE MANAGEMENT WHY THE SAME FORCE NOT APPLIED FOR PASSENGER SAFETY, YOU SHOULD REMEMBER YOU ARE WORKING FOR THEN ONLY, YOU ARE NOT DOING SERVICE.

    SESHADRI
    TN

    ReplyDelete
  5. மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம். தங்களது பதிவு பற்றிய கருத்தும் விமர்சனங்களும் பார்த்தேன். சமூக நலன் கருதி இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டும்.நான் விபத்தின்றி பயணம் செய்ய,விலை மதிப்பில்லா மனித உயிர்களைக் காக்க விவாதக்குழு அமைக்க உள்ளோம்.அதில் தாங்களும் தங்களுடன் நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.சமூக நலனுக்காக! எனது வலைப்பக்க முகவரி driversindia.blogspot.in எனது முகநூல் முகவரி parameswarandriver நன்றிங்க!

    ReplyDelete