இன்று தமிழக அரசு எடுத்துள்ள ஒரு முடிவு நிஜமாகவே பாராட்டத் தக்கது. பாலியல் கொடுமைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது, அவர்களது சான்றிதழ்களை ரத்து செய்வது ஆகிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
பாலியல் கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவது பற்றிய புகார்கள் சமீப காலத்தில் அதிகரித்து வருகின்றது. மதுரை மாவட்டம் பொதும்புவில் ஆரோக்கியசாமி என்ற தலைமை ஆசிரியர் பல ஆண்டுகளாக ஏராளமான சின்னஞ்சிறு மாணவிகளை சீரழித்துள்ளான். ஆனால் அவன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் பிருந்தா காரத் அங்கே வரவேண்டியிருந்தது. உயர்நீதி மன்றம் கடுமையாக குட்டியாக பின்பும் காவல்துறை அசையவில்லை.
ஐந்து வயது, ஆறு வயது சிறுமிகளிடம் கூட தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் கூட உண்டு. தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்பட்டும் ஆசிரியர் இனத்தில் இப்படி கேடு கெட்ட புல்லுருவிகளும் உண்டு. பல சமயம் எவ்வித நடவடிக்கையும் கிடையாது, சில சமயம் மாறுதல் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கும்.
இப்படிப்பட்ட சூழல் நிலவும் நேரத்தில் ஆசிரியர் இனத்தையே களங்கப் படுத்தும் அற்பப் பதர்களுக்கு கடுமையான தண்டனை என்பது மிக மிக அவசியமான ஒன்று.
இது முறையாக அமுலானால் பல தவறுகள் குறையலாம். எனவே தமிழக முதல்வரை மனமாற பாராட்டுகிறேன்.
என்ன, ஜெ எப்போதாவதுதான், அரிதாகத்தான் நல்ல முடிவுகளை எடுக்கிறார். பெரும்பாலான நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராகத்தான் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்...
ராமன் அவர்களே! சட்டம் வரட்டும் ஐயா! குடும்ப வன்முறைச்சட்டம் வந்தது! வேண்டாத மாப்பிளைய மாட்டிவிடவும் முடிகிறது! நிர்வாகம் வேண்டாத வாத்தியார பழிவாங்கவும் பயன்படும்! வாத்திமாறு பாத்து பொழச்சுக்கிட்டா சரி!---காஸ்யபன்
ReplyDelete//ஜெ எப்போதாவதுதான், அரிதாகத்தான் நல்ல முடிவுகளை எடுக்கிறார்//
ReplyDeleteஎப்போதாவது எடுக்கிறாரே.