இது ஒரு சாமானியனின் சந்தேகம். ஒரு வேளை இப்படி இருக்குமோ என்ற கேள்விக்கு பதில் நாடி இந்த பதிவு.
அரசியல் விற்பன்னர்கள் எனது சந்தேகத்திற்கு விளக்கம் அளியுங்களேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிறது. அதற்கு காரணம் எதுவும் சொல்லவில்லை. தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை தேர்தலிலிருந்து ஒதுங்கி நின்ற கட்சி இது. தா.பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராக அம்மாவின் கடைக்கண் பார்வைக்காக அவர் காத்திருப்பதாக ஏற்கனவே காற்றில் தகவல்கள் கசிந்து வந்தன.
அதனால்தான் இந்த சாமானியனுக்கு ஒரு சந்தேகம்.
பாஜக ஆதரிப்பதால் சங்மாவை ஆதரிக்க முடியாது. பிரணாப்பை ஆதரித்தால் அம்மாவிற்கு கோபம் வரும். அம்மாவிற்கு கோபம் வந்தால் ராஜ்ய சபா சீட் பறி போகும். எதற்கு வம்பு, ஜனாதிபதி தேர்தலை விட தமிழகத்திலிருந்து கிடைக்கும் ஒரு ராஜ்யசபா சீட் மிகவும் முக்கியம் என்பதால் சி.பி.ஐ புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்குமோ?
இந்த சாமானியனின் சந்தேகத்தை யாராவது தீர்த்து வையுங்களேன் ...
No comments:
Post a Comment