Saturday, July 6, 2024

கடைசியில் என் பெயரிலேயும் . . .

 


முகநூலில் பல சமயம் நமக்கு ஏற்கனவே நண்பர்களாக இருப்பவர்களிடமிருந்து நட்பழைப்பு வருகிற போது அது போலி என்று தெரிந்து அவர்களை கலாய்த்து அவர்கள் பணம் கேட்பதற்கு முன்பே நான் பணம் கேட்டு வெறுப்பேற்றுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு.

இன்று என் பெயரிலேயே ஒரு திருடன் போலிக்கணக்கு ஆரம்பித்து பல நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நட்பழைப்பு அனுப்பியிருக்கிறான்.


புதிதாக ஏதாவது முகநூல் கணக்கு துவக்கி இருக்கிறாயா என்று என் மகன் தொலைபேசியில் கேட்டபோதுதான் விபரம் தெரிந்தது.

இதில் கொடுமை என்னவென்றால் அவன் எனக்கே நட்பழைப்பு அனுப்பி உள்ளான். அந்த நட்பழைப்பை இப்போது காணவில்லை.

எனவே இதனால் நான் அளிக்கும் எச்சரிக்கை என்னவென்றால்

என் பெயரில் வரும் நட்பழைப்பை ஏற்க வேண்டாம். பணம் கேட்டால் ஒரு பைசா கூட அனுப்ப வேண்டாம். முடிந்தால் அந்த போலியை பணம் கேட்டு வெறுப்பேற்றவும்.


3 comments:

  1. ஸ்வாமிநாதன் ராமன்July 6, 2024 at 9:57 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஸ்வாமிநாதன் ராமன்July 6, 2024 at 9:57 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. என்னால் வாழ்வு கிடைத்து பின் நன்றி கெட்டதனமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கேடு கெட்ட ஜந்து அதன் திருட்டு புத்தி காரணமாக என் பெயரை பயன்படுத்தி குரைத்து விட்டு போயிருக்கிறது.

      Delete