சங் பரிவாரம் சிதைக்க நினைக்கிற ஏராளமான நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இடதுசாரி சிந்தனையாளர்களின் கோட்டையாக திகழ்வதால் அதன் மீது மோடி அரசு தொடர்ந்து பல விதமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நிதி ஒதுக்கீடு வெட்டு, மோசமான ஆசிரியர்கள், துணை வேந்தரை நியமிப்பது, காவல்துறை நடவடிக்கை, இன்று எம்.பி யாகவும் அமைச்சராகவும் இருக்கிற ரௌடிகளைக் கொண்டு தாக்குதல், ஜேஎன்யு மாணவர்கள் மீது அவதூறுப் பிரச்சாரம் என்று பல பரிமாணங்களில் மோடி அரசு வேட்டையாடுகிறது.
ஜேஎன்யு மாணவர் பேரவையின் தலைவராக இருந்த தோழர் உமர் காலித் , டெல்லி கலவரங்களை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் ஐந்தாண்டுகளாக பிணையில் உள்ளார். பிணை கூட மறுக்கப்படவில்லை. துப்பாக்கியை காண்பித்த பொறுக்கி அனுராக் தாகூருக்கு மந்திரி பதவியே கொடுக்கப்பட்டது. அது போலத்தான் இன்னொரு பொறுக்கி கபில் மிஸ்ராவுக்கும் பரிசு கிடைத்தது.
இப்படிப்பட்ட சூழலில் இந்தாண்டு நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி மாணவர் சங்கங்களின் கூட்டணி தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், ஆகிய நான்கு பொறுப்புக்களையும் இடது அணி வென்றுள்ளது.
கடந்தாண்டு இணைச்செயலாளர் பொறுப்பில் மட்டும் பாஜக குண்டர் படை ஏ.பி.வி.பி வென்றது. ஜே.என்.யு கோட்டையில் ஓட்டை விழுந்து விட்டது. இனி கோட்டை மொத்தமாக சரியும் என்று கொக்கரித்தார்கள்.
இந்த ஆண்டு அந்த கணக்கையெல்லாம் பொய்க் கணக்காக்கி விட்டு இடது அணி முழுமையாக வென்றுள்ளது.
மத்திய அரசின் ஆதரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவு, பண பலம், ஊடக பலம், ரௌடிகள் பலம் ஆகியவற்றையெல்லாம் முறியடித்து
ஜேஎன்யு வளாகத்தில் இன்று பறக்கும் செங்கொடி நாளை தேசமெங்கும் பறக்கும்.

No comments:
Post a Comment