Saturday, November 8, 2025

தெரு நாய்கள்-தெளிவா சொல்லுங்க ஜட்ஜய்யா

 


தெரு நாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு பற்றி இன்று ஆங்கில இந்துவில் வந்துள்ள செய்தியை படித்து நான் புரிந்து கொண்டவை

கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், பேருந்து டெப்போக்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் திரியும் தெருநாய்களை

உள்ளாட்சி அமைப்புக்கள் பிடித்து அவற்றுக்கு என ஒரு அடைப்பிடம் உருவாக்கி கருத்தடை செய்து . . . .

எந்த பகுதியிலிருந்து தெரு நாய்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டதோ, அதே பகுதியில் அவை மீண்டும் விடப்படக்கூடாது, இதை நாங்கள் மிகவும் தெளிவோடு சொல்கிறோம். எந்த பகுதியிலிருந்து பிடிக்கப்பட்டதோ அதே பகுதியில் மீண்டும் விடுவது எங்கள் ஆணைக்கே முரணாகி விடும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இவைதான் தீர்ப்பில் உள்ளவை.

மேலே உள்ள பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள தெரு நாய்களை எதுவும் செய்ய வேண்டாமா? அவைகள் எப்போதும் போல சுதந்திரமாக திரியலாமா? அவற்றை பிடிக்க மாட்டீர்களா? 

நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளை விட ஆயிரம் மடங்கு தெரு நாய்கள் மற்ற பகுதிகளில்தான் இருக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தாமல் தெரு நாய் பிரச்சினை எப்படி தீரும்?

பிடித்து கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களை பிடிக்கப்பட்ட பகுதியில் விடக்கூடாது என்றால் பின் எங்கே விடுவீர்கள்? ஏற்கனவே பிரச்சினை பெரிதாக உள்ள இடங்களிலா? 

தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும்தான் கால்நடைகளினால் விபத்துக்கள் ஏற்படுகிறதா?

கொஞ்சம் நிதானமாக யோசித்து அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்படி தெளிவான உத்தரவுகளை பிறப்பியுங்கள் நீதியரசர்களே!




மேலே உள்ள இரண்டு படங்களும் இன்று காலை எடுக்கப்பட்டவை. என் வீட்டு வாசலில் உலா வரும் தெருநாய்கள் கோஷ்டி சண்டை ஒன்றை முடித்து விட்டு திரும்பிய போது பாதுகாப்பாக காம்பவுண்டுக்குள் நின்று எடுத்தது.

செய்தித்தாளிலிருந்து நான் புரிந்து கொண்டது சரியென்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வே இல்லை. 



No comments:

Post a Comment