Saturday, November 15, 2025

கவலைக்கிடமாய் . . .

 


தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு,

வாக்குத் திருட்டு,

மத வெறி பிரச்சாரம்,

தேர்தலுக்கு முதல் நாள் வெடித்த வெடிகுண்டு,

தமிழ்நாட்டில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதை பிச்சை கொடுப்பது என்று இழிந்து பேசிக் கொண்டே பத்தாயிரம் ரூபாய் அளித்தது,

என்று ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதெல்லாம் நமக்கு   நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வதாகத்தான் இருக்கும். 

அயோக்கியத்தனம் செய்வதையே வாழ்வியலாகக் கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் வாக்குகளைக் குவிக்க முடிகிறது என்றால்

நம் மக்களிடமும் ஏதோ கோளாறு இருக்கிறது. தங்கள் வாழ்வைப் பறிக்கிறவர்களையே விரும்புகிற அளவிற்கு மோசமாகி விட்டார்கள்.

அவர்களின் நம்பிக்கையை "இந்தியா" எப்படி வெல்லப் போகிறது?

இப்போது இந்திய ஜனநாயகத்தின் நிலைமை தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக உள்ளது. அது மீளுமா அல்லது மீளாத்துயரை நமக்கு அளிக்குமா?

சிகிச்சை தர வேண்டிய பொறுப்பில் உள்ள "இந்தியா" அணி தங்களுக்குள் உண்மையான பரிசீலனை செய்ய வேண்டும். 

அநேகமாக "இந்தியா" அணியின் அனைத்து கட்சிகளுக்குள்ளும் சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுறுவியுள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டு தூக்கி வீசப்பட வேண்டும். 

பல கட்சிகளிலும் (இடதுசாரிகள் உட்பட) களைகள் மண்டிக் கிடக்கின்றன. கொஞ்சம் கூட தயவு தாட்சண்யமின்றி அந்த களைகள் அகற்றப்பட வேண்டும்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து கொண்டு அவற்றின் தீர்வுக்கான போராட்டங்களை நடத்த வேண்டும். 

இவற்றையெல்லாம் செய்தால் ஜனநாயகம் பிழைக்கும். இல்லையென்றால் புலம்பலே வாழ்வாகும். 

No comments:

Post a Comment