இன்று சமூக ஊடகத்தின் வைரல் செய்தி, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைக்கலைஞர் கௌரி கிஷன் அவர்களிடம் கீழே தொப்பி அணிந்துள்ள பத்திரிக்கையாளர் (யூ டூயுபராம்) அநாகரீகமாக கேள்வி கேட்டதும் அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்ததும்தான். அந்த காணொளியை நான் முழுமையாக பார்த்தேன்.
அந்த நபர் மீண்டும் மீண்டும் கூச்சலிடுகிறான், தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறுகிறான். அந்தப் பெண் இறுதிவரை உறுதியாக சமாளித்தார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அந்த யூடூயுபரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை பாராட்டத்தக்கது.
அதே நேரம்
இந்த அறிக்கையில் அந்த யூடூயுபரின் பெயரையும் அந்த சேனலையும் பெயரின் சேர்த்திருக்க வேண்டும். அந்த சமயத்தில் அந்த கார்த்திக்கின் நடவடிக்கையை கண்டிக்காமல் மௌனம் காத்திருந்த இதர பத்திரிக்கையாளர்களையும் சேர்த்து கண்டித்திருக்க வேண்டும். அறிவுரை மட்டும் போதுமானது அல்ல.
லேளா மரங்களாக இருந்தவர்கள் அந்த பத்திரிக்கையாளர்கள் மட்டும் அல்ல, அந்த திரைப்படக்குழுவினரும்தான். அவர்களும் கண்டனத்துக்கு உரியவர்கள்.


No comments:
Post a Comment