நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சோஹ்ரான் மம்தானியின் தந்தை மகமது மம்தானியின் பூர்வீகம் குஜராத். அவர் பிறந்ததே பம்பாயில்தான்.
அதே போல் தாய் மீரா நாயர் பிறந்ததும் ஒடிஷாவில். திருமணம் வரை இந்தியாவில்தான் இருந்துள்ளார். உலகின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் அவர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இரு முறை சிறந்த இயக்குனராக விருதும் பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த யாராவது சின்னஞ்சிறிய வெற்றி பெற்றால் கூட அவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் மோடி நியூயார்க் மேயர் என்ற மிக முக்கியமான பொறுப்பை வென்றுள்ள ஸொஹ்ரான் மம்தானியை பாராட்டி ஒரு வார்த்தையாவது எழுதியுள்ளாரா என்று அவர் ட்விட்டர் பக்கத்தை தேடித் தேடிப் பார்த்தேன். எதுவுமே இல்லை.
டொனால்ட் ட்ரம்பால் வெளிப்படையாக எதிர்க்கப்பட்ட, தன்னை ஒரு சோஷலிஸ்ட் என்றும் பாலஸ்தீன ஆதரவாளர் என்றும் அறிவித்துக் கொண்ட ஒருவரை இந்திய வம்சாவழியினர் என்று வாழ்த்தும் அளவிற்கு மோடிக்கு தைரியம் இருக்கிறதா என்ன?
மோடி தன்னை 56 இஞ்ச் மாவீரன் என்று வெளியில் பீற்றிக் கொண்டாலும் பேஸ்மெண்ட் வீக்கான படு கோழைதான்.
பிகு: இன்னும் கூட ஒரு தகவல் உள்ளது. அது பிறகு . . .

No comments:
Post a Comment