கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நியூயார்க் நகர மேயர் தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டன.
ஜனாதிபதி ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பாக குர்டிஸ் என்றொருவரையும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை ஆதரித்த பெரும் பணக்காரன் எலான் மஸ்க் குவாமோ என்றொருவரை நிற்க வைக்க ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய வம்சாவழி இஸ்லாமியர் ஸோஹ்ரான் மம்தானி என்பவரும் களத்தில் இருந்துள்ளனர்.
மம்தானி ஒரு கம்யூனிஸ்ட். அவரை மேயராக தேர்ந்தெடுத்தால் நியுயார்க் நகருக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்று ட்ரம்ப் அறிவித்தார். குர்டிஸ்ற்கு வாக்களிப்பது மும்துமியோ இல்லை வேறு என்ன பெயரோ, அந்தாளுக்கு வாக்களித்தது போலாகும் என்பது எலான் மஸ்கின் பிரச்சாரம்.

ஆனால் நியூயார்க் நகர மக்கள் இந்த இருவரையும் மதிக்கவில்லை. ஸோஹ்ரான் மம்தானிக்கு வாக்களித்து அவரை மேயராக தேர்ந்தெடுத்து விட்டனர்.
இவரது வெற்றி முக்கியமானது.
ஏனெனில்
ஸோஹ்ரான் மம்தானி தன்னை சோஷலிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். முதலாளித்துவத்துற்கு எதிரானவர் என்றும் சொல்லியுள்ளார். பாலஸ்தீன மக்களுக்கும் புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் ஆதரவாக உள்ளவர்.
அமெரிக்காவில் மற்ற இடங்களில் நடந்த இடைத் தேர்தல்களிலும் ட்ரம்பிற்கு செமத்தியான அடி கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சிகரமானது.
நியூயார்க் நகர மேயராக ஒரு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் அதுவும் அமெரிக்க பெரும்பான்மை மக்களுக்கு ஒத்துவராத கொள்கைகளைக் கொண்டவர் வென்றுள்ளது சிறப்பானது.
ஸோஹ்ரான் மம்தானிக்கு வாழ்த்துக்கள்.
பிகு: இன்னும் ஒரு விஷயம் எழுத வேண்டும். என் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொண்டு மாலை எழுதுகிறேன்.


அதிகாரத்தைக் கைப்பற்றும் (அதிபர் போன்ற) முக்கியமான தேர்தல்களைத் தவிர்த்து, பிற தேர்தல்களை மட்டும் நியாயமாகவே நடத்தி, மக்களின் மனதறிவதுதான் இவர்களது நோக்கம்.
ReplyDeleteமம்தானி வென்றால், 'நிதியளிக்க மாட்டேன்' எனும் மனவியாதியை, நியூயார்க் மக்கள் வச்சி செய்வார்கள் என நம்புவோம்.