"தமிழ் மணம்" வலை திரட்டி செயல்பாட்டில் இருந்தவரை எனது வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS) சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்து இருநூறு வரை இருக்கும். தமிழ்மணம் முடங்கிய பின்பு அது சராசரி ஐநூறு என்ற அளவில்தான் இருந்து வருகிறது. மக்களவைத்தேர்தல் சமயத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் அளவுக்குச் சென்றது.
ஆனால் நேற்று முன் தினம் இரவு முதல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செவ்வாய் இரவு ஒன்பது மணி அளவில் வீடு திரும்பிய போது கூட 360 தான் இருந்தது. நேற்று இரவு பார்த்தால் செவ்வாயன்று பார்வைகள் 5168 என்றும் நேற்று இரவு வரை 7037 என்றும் இருந்தது.
காலையில் இப்போதைய நிலவரம் இது . . .
நேற்று முன் தினம் இரவு முதல் யார் என் வலைப்பக்கத்திற்கு படையெடுத்து வந்தார்கள்?
சமீபத்திய பதிவுகள் தொடங்கி பத்தாண்டுகளுக்கு முந்தைய பதிவுகள் வரை படிக்கப்பட்டுள்ளது. புளிச்ச மாவு ஆஜான் குறித்து எழுதிய பெரும்பாலான பதிவுகள் பல முறை படிக்கப்பட்டுள்ளது. மாலன் பற்றிய எந்த பதிவும் சீண்டப்படவில்லை என்பது வேறு விஷயம்!
திடீரென ஏன் இந்த பரபரப்பு?
இது நல்லதா? கெட்டதா?
எதுவாக இருந்தாலும் I am waiting. . . .
No comments:
Post a Comment