Friday, September 16, 2016

வாணிஸ்ரீயை பார்த்ததேயில்லை




நினைவுகளின் அடுக்குகளில்
ஆழமாய் தேடிப்பார்த்தேன்.
பள்ளி சென்ற நாள் முதல்
கல்லூரி முடித்து
வெளி வந்த வரையும்
காணவில்லை.
அதன் பின்பும் கூட
ஒரு முப்பது ஆண்டுகள்.
வாழ்வில் எங்குமே
வாணிஸ்ரீயைக் கடக்கவில்லை.
வாணிஸ்ரீயின் சாயலில் கூட
எவரும் எதிர்ப்படவில்லை.
திரையில் பார்த்தவர் கூட
மங்கலாய்த்தான் தெரிகின்றார்.
கவிதை புனையும்
தகுதி இனி ஒருபோதும்
கைவராதோ?


முக நூலில் எழுதப்படும் ஏராளமான வாணிஸ்ரீ கவிதைகளின் தாக்கத்தில் உருவானது

1 comment:

  1. bro i have heard that vani sree had acted many pictures with sivaji jayshanker muthuraman and avm rajan.... a good acting she exibited in all films she acted...

    ReplyDelete