Thursday, September 8, 2016

இதுவே சோனியா சொல்லியிருந்தால்?????




இத்தாலி நாட்டு மாலுமிகள் இந்திய மீனவர்களை கொன்றது நினைவில் உள்ளதா?

மன்மோகன் அரசு அவர்களை தப்ப விட்டது நினைவிலிருக்கிறதா?

இத்தாலி நாடென்பதால் சோனியா கருணை காட்டினார் என்று பாஜக குற்றம் சாட்டியது நினைவிலிருக்கிறதா?

இல்லையென்றால் எல்லாவற்றையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள்.

சரி, இப்போது நேற்றைய நாளிதழில் படித்த ஒரு செய்தியையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இத்தாலிக்குச் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். மாலுமிகளை விடுதலை செய்தால் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேம்படும் என்று அவர் சொன்னதாகவும் இரு அமைச்சர்களும் தங்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் செய்திகள் சொல்கிறது. முதிர்ச்சியின் அர்த்தம் என்னவென்று செய்திகள் சொல்லவில்லை. அது சுஷ்மாவுக்கே வெளிச்சம்.

இச்செய்தியில் சுஷ்மா என்பதற்குப் பதில் சோனியா காந்தி என்று இருந்தது என கற்பனை செய்து பாருங்கள்.

சுனா சாமி, எச்.ராஜா உள்ளிட்ட காவிப்படை பேச்சுப் போக்கிரிகள் எப்படியெல்லாம் பேசியிருப்பார்கள். தேசத்துரோகி பட்டம் எத்தனை முறை கிடைத்திருக்கும்? 

இப்போது அவர்கள் எல்லாம் வாயில் வினாயகர் சதுர்த்திக்கு செய்த கொழுக்கட்டைகளை வைத்திருக்கிறார்களா?

 
 

1 comment: