Thursday, September 29, 2016

போர் முனையில் ஒரு பரிமாற்றம்




எப்போதோ படித்த ஒரு நகைச்சுவை இப்போது நினைவுக்கு வந்தது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்தது. திருமணம் நிச்சயமாகியிருந்த ஒரு போர் வீரனுக்கு விடுமுறை தேவைப்பட்டது. அந்த வீரனின் உயரதிகாரி முதலில் விடுப்பு தர மறுத்து திட்டி அனுப்பி விட்டார். பிறகு மனம் மாறி அந்த வீரனை அழைத்து "பாகிஸ்தானின் டாங்க்  ஒன்றை கைப்பற்றிக் கொண்டு வந்தால் ஒரு மாதம் லீவ் தருகிறேன்" என்று சொல்ல, அன்று இரவே அந்த வீரன் பாகிஸ்தான் நாட்டு டாங்க் ஒன்றோடு வந்து விட அவனைப் பாராட்டி விடுப்பும் கூடவே பரிசுப் பொருட்களும் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

"எப்படி பாகிஸ்தான் டாங்கை நீ கைப்பற்றினாய்?" ஊரில் அவன் நண்பர்கள் கேட்டார்கள்.

பாகிஸ்தான் நாட்டு வீரன் ஒருவனுக்கும் விடுப்பு தேவைப்பட்டது. இந்திய டாங்க் ஒன்றை கைப்பற்றி வா என்று அவனுக்கும் உத்தரவு போட்டிருந்தார்களாம்.

நாங்கள் இருவரும் மாற்றிக் கொண்டோம். அவ்வளவுதான்.

பின் குறிப்பு: பாகிஸ்தானில் நிலவும் ஏராளமான பிரச்சினைகளிலிருந்து பாகிஸ்தான் மக்களின் கவனத்தை திசை திருப்ப நவாஸ் ஷெரிபீற்கும் இந்தியாவில் நிலவும் ஏராளமான பிரச்சினைகளிலிருந்து இந்திய மக்களின் கவனத்தை திசை திருப்ப நரேந்திர மோடிக்கும் "போர்" என்ற பரபரப்பு நிகழ்வு  தேவைப்படுகிறது என்றெல்லாம் இந்த நகைச்சுவை மூலம் நான் சொல்ல முன்வரவில்லை, அதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது என்றபோதிலும் கூட 

5 comments:


  1. துரோகி கம்யூனிஸ்டுகளுக்கு தேசபக்தி
    கிடையாது என்பதை நிரூபித்து விட்டாய்.

    ReplyDelete
    Replies
    1. கம்யூனிஸ்டுகளுக்கு தேச பக்தி பற்றி உபதேசிக்க சுதந்திரப் போரை காட்டிக் கொடுத்த சவர்க்கர், வாஜ்பாய் போன்றவர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்த காவிகளுக்கு அருகதை கிடையாது. வரலாறு படியுங்கள். மேலும் அறிமுகம் இல்லாத ஒருவரை ஒருமையில் பேசுகிற நாகரீகம் இல்லாதவர் நீங்கள். மோடி எனும் மோசடிப் பேர்வழி தன்னை காப்பாற்றிக் கொள்ள செய்கிற சதி இந்த போர்.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அது குஷ்வந்த்சிங்கோட ஜோக். எஸ்.வி.சேகர் திருடிட்டார் போல. மோடி செய்வதெல்லாம் வெறும் ஜோக்தான்

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete