Friday, September 2, 2016

ஏன், ஏன், இன்று ஏன்?



இந்திய தொழிலாளி வர்க்கம் இன்று ஒரு நாள் வேலை  நிறுத்தம் மேற்கொள்வது ஏன் என்பதை இந்த பதிவு விளக்கும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர் வாளான "இன்சூரன்ஸ் வொர்க்கர்" ஆகஸ்ட் 2016  இதழின் ையங்கத்ின் தமிழாக்கம் கீழே உள்ளது. எங்கள் கோட்ட இதழான சங்கச்சுடரில் வெளியானது.



2 செப்டம்பர் 2016 அகில இந்திய வேலை நிறுத்தத்தை நோக்கி

30.03.2016 அன்று புது டெல்லியில் நடைபெற்ற மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சங்கங்களின் தேசியக் கருத்தரங்கு மத்தியரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக 2 செப்டம்பர் 2016 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வது என்று அறைகூவல் விடுத்தது. உழைக்கும் வர்க்கத்தின் பனிரெண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு தரப்பட்டது.

உழைக்கும் வர்க்கம் கடந்த வருடம் இதே நாளில் (02.09.2015) அன்று நாடெங்கிலும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டது. கிட்டத்தட்ட பதினைந்து கோடி தொழிலாளர்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலை நிறுத்தம் இது. தேசத்தின் பொருளாதாரத்தில் இருளூம் துயரமும் சூழ்ந்து நாடெங்கிலுமுள்ள உழைக்கும் மக்களின் வாழ்வின் மீதும் வாழ்வாதாரத்தின் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்த வேளையில் இந்த வேலை நிறுத்தத்தை நோக்கி உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகாரத்திற்கு வந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்து விட்டது. பொய்களைப் பரப்பி புள்ளி விபரங்களை திரித்துக் கூறி கொஞ்சமும் கூச்சமின்றி வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். மோடியில் வீரியமான தலைமையில் புதிய விடியல் வந்து கொண்டிருப்பதாகவும் இந்தியா வல்லரசாக மாறிக் கொண்டிருப்பதாகவும் கதைக்கிறார்கள். பணமும் அதிகாரமும் படைத்தவர்களாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிற மத்தியரசின் செயல் திட்டத்தில் ஐம்பது கோடி உழைப்பாளி மக்களின் பிரச்சினைகள் மட்டும் இடம் பெறவே இல்லை.

2 செப்டம்பர் 2015 வேலை நிறுத்தம் மூலமாக உழைப்பாளி மக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த பிறகும் கூட மத்தியரசின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் கடந்த ஒரு வருடத்தில் தொழிலாளர்கள் மீதும் ஏழைகள் மீதும் அரசு நடத்தும் தாக்குதல் அதிகரிக்கத்தான் செய்துள்ளது. அன்னிய, உள்நாட்டு மூலதனத்தின் நலனை பாதுகாக்க அரசு உழைக்கும் மக்களின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மூலதன சுழற்சி ஆகியவற்றின் பெயரைச் சொல்லி அனைத்து விதமான பொய்களும் கட்டவிழ்த்து விடப்பட்டு தேசத்தின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரும் ஊறு விளைவிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கைகளில் ஒன்று. குறைந்தபட்ச ஊதியத்தை ரூபாய் பதினெட்டாயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்று நீதியரசர் மாத்தூர் குழு பரிந்துரை அளித்துள்ளது. அதனை அமலாக்க வேண்டும் என்பது தொழிற்சங்கங்கள் கோருகிறது. ஆனால் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் பதினெட்டாயிரம் என்பதை ஏற்க அரசு மறுக்கிறது. பூதாகரமாக மாறியுள்ள வேலையின்மை பிரச்சினையை சமாளிப்பதில் அரசு முற்றிலுமாக தோற்றுப் போயுள்ளது. அரசின் கொள்கைகள் புதிய வேலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக இருக்கும் வேலைகளையும் அழிக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதியாகிறார்கள். ஆனால் கடந்த இரு வருடங்களாக வெறும் நான்கு லட்சம் வேலை வாய்ப்புக்கள்தான் உருவாகியுள்ளது. இந்த கடுமையான வேலையில்லா திண்டாட்டம் சமூகத்தில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்துகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் கொள்கையை அரசு தொடர்கிறது. பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தாரை வார்ப்பதன் மூலம் 56,000 கோடி ரூபாயை திரட்ட இந்த ஆண்டு பட்ஜெட் முன்மொழிகிறது. உள்நாட்டு செல்வாதாரங்களையும் உழைக்கும் மக்களையும் முழுமையாய் சுரண்டிட வழிவகுக்கும் வகையில் இந்தியப் பொருளாதாரத்தை அன்னிய மூலதனத்திற்கு திறந்து விட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய திறந்த பொருளாதாரம் இந்தியா என்று பிரதமர் இதற்காக பெருமிதப்படவேறு செய்கிறார்.

தற்போதுள்ள நாற்பது தொழிலாளர் நலச்சட்டங்களை அகற்றி ஐந்து புதிய சட்டங்களாக சுருக்க மத்தியரசு விழைகிறது. தொழிலாளர் நலம் 2016 விதிகள், ஊதிய விதிகள் 2016, சிறு தொழிற்சாலைகள் (பணி ஒழுங்கு மற்றும் நிலைமைகள்) விதிகள் 2016, கடைகள் மற்றும் நிறுவன்ங்கள் (திருத்தம்) விதிகள் 2016, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர பிரிவுகள் (திருத்தம்) விதிகள் ஆகியவையே அந்த புதிய சட்ட விதிகள். இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை தாக்குவதற்கே வழி வகுக்கும். ஊழியர்களை சுலபமாக பணி நீக்கம் செய்ய, பணிச் சூழல்களை விருப்பம் போல மாற்றி அமைக்க, ஊகச் சந்தையோடு இணைந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை தொழிலாளர்கள் மீது திணிக்க முதலாளிகளுக்கு உதவக் கூடிய வித்திலேயே இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் உள்ளன. தொழிலாளர்கள் சங்கம் அமைத்து போராடுவதை மிகவும் கடினமாக்க்க் கூடிய வித்த்தில் தொழிற்சங்க சட்ட்த்தையும் மாற்றியமைக்க அரசு திட்டமிடுகிறது. “உழைப்பு வெல்லட்டும் என்ற தொழிலாளர் நல அமைச்சகத்தின் முழக்கத்தை உழைப்பாளர்களுக்குப் பதிலாக முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றுகிறது மோடி அரசு.

தொழிற்சாலைகளை ஆய்வு செய்வது என்பது அடியோடு நிறுத்தப்பட்டு விட்ட்து. தொழிலாளர் சட்டங்களை அமலாக்குவதாக முதலாளிகள் ஒரு தன்னிலை அறிக்கை கொடுத்தால் போதுமானது என்று மாற்றி விட்டார்கள். தொழிலாளர் சட்டங்கள் பொதுப்பட்டியலில் வருவதால் பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தானிலும் ஹரியானாவிலும் உழைப்பாளிகளுக்கு கேடு விளைவிக்கும் இச்சட்டங்களை அமலாக்க தொடங்கியுள்ளனர். தொழிலாளர் சட்டங்களை எதிர்காலத்தில் நாடு முழுமைக்கும் மாற்றுவதற்கான பரிசோதனைக் கூடமாகவே இம்மாநிலங்கள் இருக்கிறது என்பது யதார்த்தம்.

தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்தியரசு முற்றிலுமாக புறக்கணிக்கிறது. உலகமயக் கொள்கையினை தீவிரமாக பற்றி நிற்பதால் ஒப்பந்த்த் தொழிலாளர் முறையும் தினக்கூலி முறையும் அதிகரித்து வருகிறது. உழைக்கும் மக்களின் கடுமையான போராட்ட்த்தால் வருங்கால வைப்பு நிதி சேமிப்பை திரும்ப்ப் பெறுகையில் 60 % தொகைக்கு வருமான வரி விதிக்கும் முன்மொழிவு திரும்ப்ப் பெறப்பட்ட்து. வருங்கால வைப்பு நிதியில் முதலாளியின் பங்கை திரும்ப்ப் பெறுவதில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், தொழிலாளிகளின் கடுமையான போராட்ட்த்தால் அதிலும் குறிப்பாக பெங்களூர் மற்றும் விசாகப்பட்டிணத்தில் மகளிர் தொழிலாளிகள் நட்த்திய போராட்ட்த்தால் அரசு தனது பிற்போக்குத்தனமான முடிவை திரும்ப்ப் பெற வேண்டியதாயிற்று.

நம்முடைய துறையிலும் கூட கடுமையான எதிர்ப்பிருந்தும் மக்களின் கருத்துக்கு மாறாக இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு அன்னிய மூலதன வரம்பு 26 % லிருந்து 49 % ஆக உயர்த்தப்பட்டு விட்ட்து. ஒட்டு மொத்த பிரிமிய வருமானத்தில் கடநதாண்டு 12 % வளர்ச்சி ஏற்பட்டாலும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவன்ங்களை நிதியாதாரத்தை திரட்ட வேண்டும் என்ற பெயரில் பங்குச்சந்தையில் இணைக்க முயல்கிறது. அனைத்து பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவன்ங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை மத்தியரசு தொடர்ந்து உதாசீனம் செய்கிறது. எல்.ஐ.சி யை தனியார் மயமாக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற எல்.ஐ.சி மீதான தாக்குதல்களை அரசு அதிகரிக்கும்.

இன்சூரன்ஸ் ஊழியர்களாகிய நாம், விழிப்புணர்வோடு இருந்திட வேண்டும். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன்ங்களை பாதுகாக்கிற போராட்டங்களையும் பிரச்சார இயக்கங்களையும் தொடர்ந்து உறுதியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் மத்தியிலும் கருத்துக்களை உருவாக்குபவர்கள் மத்தியிலும் விரிவாக செல்வதற்கான வாய்ப்பை எல்.ஐ.சி யின் வைர விழா ஆண்டு அளித்துள்ளது. செப்டம்பர் இரண்டு நாடு தழுவிய வேலை நிறுத்த்திற்கான அறைகூவலும் நமது போராட்ட்த்தை இந்திய உழைக்கும் மக்களின் விரிந்த போராட்ட்த்துடன் இணைப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. சர்வதேச நிதிமூலதனத்தினால் வழிநட்த்தப்படும் இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை வலிமையான, ஒற்றுமையான போராட்டங்கள் மூலமே முறியடிக்க முடியும் என்பதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

மத்தியரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான இயக்கங்கள் வலிமையடையவும் மகத்தான வெற்றி பெறவும் நம்முடைய பங்களிப்பாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க இரண்டு செப்டம்பர், 2016 ஒரு நாள் வேலை நிறுத்த்த்தில் கலந்து கொள்வீர் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அனைத்து இன்சூரன்ஸ் ஊழியர்களையும் அழைக்கிறது.

இரண்டு செப்டம்பர் ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும்.


2 comments:

  1. தமிழாக்கம் செய்தவரின் பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்? அடுத்தவரை பாராட்ட உனக்கு என்றைக்கு மனசு இருந்திருக்கு?

    ReplyDelete
  2. ஐய்யா அதி மேதாவி அனானி, வெறும் காழ்ப்புணர்வில் இப்படி எல்லாம் எழுதி அசிங்கப்படாதே. தமிழாக்கம் செய்தது நானென்பதால்தான் குறிப்பிடவில்லை. இப்படி கற்பனை செய்து கொண்டு வன்மம் வளர்ப்பதை நிறுத்திக் கொள்

    ReplyDelete