Sunday, September 4, 2016

அதிகமில்லை,எட்டரை லட்சத்தில் பாதிதான்

வாலாஜாவை அடுத்துள்ள அம்மூருக்கு காலையில் ஒரு திருமணத்திற்கு போயிருந்தேன். திருமண மண்டபத்திற்கு எதிரே அரசினர் மேனிலைப் பள்ளி இருந்தது. அதன் வாசலில் காரை நிறுத்தி விட்டு உள்ளே போய் விட்டோம்.

திருமணம் முடிந்து கார் ஏறுகையில்தான் அந்த அடிக்கல் கண்ணில் பட்டது. 

முகப்பு வாயிலுக்கு மூன்றரை லட்சமும் இருபது அடி சுற்றுச்சுவர் (ஹாலோ பிளாக்கில் கட்டப்பட்டு சுண்ணாம்பு பூசப்பட்டது) கட்ட ஐந்து லட்ச ரூபாயும் செலவானது என்று தகவல் சொன்னது இந்தக் கல்.








கீழேயுள்ள படம்தான் அந்த மூன்றரை லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு கட்டப்பட்ட முகப்பு வாயில். அதற்கடுத்த படத்தில் ஐந்து லட்ச ரூபாய் செலவில் கட்டப் பட்ட சீனப்பெருஞ்சுவர். 




எட்டரை லட்சத்தில் பாதியையாவது சாப்பிட்டிருப்பார்கள் என்பது சாதாரணமாக பார்த்தாலே தெரிகிறது. எழவு! இதெல்லாம் நம்ம கண்ணிலதான் படுது!

இப்படியெல்லாம் கொள்ளையடித்த பணத்தை வைத்துக் கொண்டுதான் வாக்காளர்களுக்கு ஐநூறு, ஆயிரம் ரூபாய் என்று வாரியிறைத்தார்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் கொள்ளையடிக்க.



 

No comments:

Post a Comment