Thursday, July 19, 2012

ராணுவ தளபதிக்கும் எனக்கும் என்ன பிரச்சினை?




இன்று எனக்கு அதிகாரபூர்வமான பிறந்த நாள். பத்து மாதங்கள் முன்பான தேதியைச் சொல்லி பள்ளியில் சேர்த்ததால் இன்று அதிகாரபூர்வ பிறந்த நாள். பத்து மாதங்கள் முன்பாக ஓய்வு பெறப் போகிறேன், முன்னாள் ராணுவ தளபதி திரு வி.கே.சிங் போல. இது பரவாயில்லை, ஆனால் மிகப் பெரிய தர்ம சங்கடத்தை சந்தித்தேன்.

எங்களது அலுவலக கோட்ட இணைய தளத்தில் ( இன்ட்ரா நெட்) இப்போது கோட்டத்தில் உள்ள அனைத்து ஊழியர்களின் பிறந்த நாள் அன்றும் வாழ்த்து சொல்கின்றனர். அந்தப் பக்கத்தை பார்த்து விட்டு காலை முதல் பல தோழர்கள் தொலைபேசி மூலமாக, குறுஞ்செய்தி, மற்றும் மின்னஞ்சல் வாயிலாக வாழ்த்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இது எனது நிஜமான பிறந்த நாள் இல்லை, இருப்பினும் நன்றி என சொல்லிக் கொண்டே இருந்து ஒரு கட்டத்தில் அதுவும் அலுத்துப் போய் நன்றியோடு நிறுத்திக் கொண்டேன்.

இந்த பிறந்த நாள் குழப்பம் ஏராளமானவர்களுக்கு இருக்கும். சிலருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருக்கும். இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு பிரச்சினையில்லை. பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் சேர்க்கவே முடியாது.

பெற்றோர்கள் அந்த காலத்தில் முன் யோசனை இல்லாமல் செய்த தவறை திரூத்த வாய்ப்பே கிடையாதா?

விஷயமறிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்!

1 comment:

  1. ராமன் அவர்களே! மதுரைக் கோட்டத்தில் ஒரு துணை மண்டல அதிகாரி இருந்தார். அவருக்கு பள்ளியில் சேரும் போது வயதை மிகவும் குறைத்துக் கோடுத்துவிட்டார்கள். அவரும் எவரிடமும் சொல்லவில்லை! அவருடைய தம்பி வங்கியில் பணியாற்றி அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதம்பி அண்ணனைப் பார்க்க வந்தார். அண்ணன் சர்வீசில் இருக்கிறார். தம்பி ஓய்வு!எவனோ மொட்டையப் பொட்டு விட்டான். செண்டரல் ஆபிசிலிருந்து ராவோடு ராவாக உத்திரவு வந்து அவர் ஓய்வில் அனுப்பப் பட்டார்.நடராஜன் என்ற அதிகாரியிடமிருந்து அவர் கூடுதலாகப் பெற்ற ஊதியத்தை பிடித்தம் செய்ய முயற்சி நடந்தது! பள்ளிச் சாண்றிதழ் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது நீதி!---காஸ்யபன்.

    ReplyDelete