காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதத்திலும் நிகரற்ற கட்சி
தாங்கள்தான் என்பதை ஊழல், மக்கள் விரோத
பொருளாதாரக் கொள்கைகள், உட்கட்சி மோதல்கள்
ஆகியவற்றில் நிரூபித்து விட்ட பாஜக முதல்வர்
உள்ளே- வெளியே ஆட்டத்திலும் நிரூபித்து விட்டது.
கர்னாடகாவில் சதானந்த கவுடா வெளியேறி
ஜகதீஷ் ஷெட்டர் முதல்வராகும் நேரம் வந்து விட்டது.
யெடியூரப்பாவின் ஒரு விசுவாசி போய் அடுத்த
விசுவாசி வந்தாகி விட்டது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமல்ல
பாஜக ஆளும் மாநிலங்களிலும் எந்த முதல்வரும்
ஐந்தாண்டு காலம் பதவியில் இருக்க முடியாது
என்ற நிலை உருவாகி விட்டது.
இனி வித்தியாசமான கட்சி என்று சொல்லிக்
கொள்ள பாஜக விற்கு என்ன பெருமை
மிஞ்சியுள்ளது?
பாஜக போல சட்டசபையில் ஆபாசப்படம்
பார்த்தது, அடுத்தவன் மனைவியை தன்
மனைவி என்று சொல்லி வெளி நாட்டுக்கு
கூட்டிச் சென்றது போன்ற அசிங்கமான
வழக்குகளில் சிக்கிய சாதனை இன்னமும்
அக்கட்சிக்கு மட்டுமே உள்ளது!
No comments:
Post a Comment