Sunday, July 8, 2012

லிப்(ட்)டில் பரவசம்

என் அம்மாவை ஒரு அறுவை சிகிச்சைக்காக
மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

அந்த மருத்துவமனையில் லிப்ட் உண்டு.
வார்டிலிருந்து கீழே இறங்க லிப்ட் நோக்கி
செல்கையில் அதன் அருகே ஒரு தாயும் 
ஐந்து வயதும் மகளும். அந்த சிறுமி லிப்டில்
போக வேண்டும் என்று சொல்ல, எப்படி 
இயக்குவது என்று தெரியாது என அந்த 
தாய் மறுத்துக் கொண்டிருந்தார்.

நான் லிப்ட் கதவை திறந்ததும், அந்த சிறுமி
தன் தாயை  அவசரம் அவசரமாக அழைத்துக்
கொண்டு உள்ளே நுழைந்தது.  

லிப்ட் கீழே இறங்க அந்த சிறுமியின் 
முகத்தில்தான் எத்தனை பரவசம்,
மகிழ்ச்சி, பயம், பதட்டம் எல்லாம்!

உடனே லிப்ட் தரைத் தளத்திற்கு 
வந்ததும் ஒரு சின்ன ஏமாற்றம்
தெரிந்தது. ஒரு முறை மாடிக்கு
போய் விட்டு கீழே வரலாமா என்று
கேட்டேன். உற்சாகமாக ஆமாம்
என்று தலையாட்டியது. 

லிப்ட் ஒரு முறை மீண்டும் மேலே
சென்று கீழே இறங்கியது. அந்த
சிறுமியின் முகபாவம் ஒரு
கவிதையாகவே இருந்தது.

இது ஒரு நல்ல அனுபவமாக
எனக்கும் இருந்தது. 

மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

பெண்ணே, உனக்கு ஐந்து வயதில்
கிடைத்த இந்த லிப்ட் அனுபவம்
எனக்கு பதினெட்டு வயதில்தான்
கிடைத்தது. நான் அப்போது 
பரவசப் பட்டதை விட பயந்ததுதான்
அதிகம் என்று. 

3 comments:

  1. if only you had given the title லி(ப்)டில் பரவசம் it would have been great.

    i visualised the brightness of the girls face.

    :-)

    ReplyDelete
  2. ராமன் அவர்களே! அந்தச்சிறுமியின் வாழ்வில் இது ஒரு மறக்க முடியாத சம்பவமாக பதிந்திருக்கும்!. நீங்களும் பதிந்திருப்பீர்கள்!வாழ்த்துக்கள்!---காஸ்யபன்

    ReplyDelete
  3. குழந்தைகள் ஒவ்வொன்றையும் புதிதாக பார்க்கின்றார்கள். கண நொடிப் பொழுதில் வாழ்கின்றார்கள். அவர்களை பல முறை பார்த்து ரசித்து வியந்து இருக்கின்றேன். குழந்தைகள் பொய் சொல்வதில்லை .. விளையாடும், அடித்துக் கொள்ளும் ... குழந்தைகள் உலகம் தனியானது .. நம்மால் ஏங்கத் தான் முடியும் ... !!!

    ReplyDelete