Sunday, January 21, 2024

லாபமல்ல, அக்கிரமம்.

  


டிமோ ரயில்வேயில் லாபம் ஈட்டி விட்டார் என்று சங்கிகள் ஒரு தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  



நிஜமாகவே லாபமா என்பது ஆய்வுக்குரிய ஒன்று. அப்படியே அது உண்மையென்றாலும் அதில் பெருமைப்பட ஏதுமில்லை. ஏனென்றால் அத்தொகை மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை வெட்டி அதில் கிடைத்த லாபமாக இருக்கும். இதில் பெருமைப்பட ஏதுமில்லை சங்கிகளே, நியாயமாக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

புல்வெளி, புல்வெளி, தன்னில் பனித்துளி, பனித்துளி

 


ஆசை திரைப்படத்தில் தேவாவின் இசையில் பிரபலமான "புல்வெளி, புல்வெளி, தன்னில் பனித்துளி, பனித்துளி" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே . . .


Saturday, January 20, 2024

இதுதான்டா மதச்சார்பின்மை நாடு

 தமுஎகச அமைப்பின் துணைப் பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழருமான களப்பிரன் அவர்களின் அனுபவப் பகிர்வு, ஒரு மதச்சார்பற்ற நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

அவரிடம் இன்னொரு ஸ்பெசல் ஐட்டம் உள்ளது. அநேகமாக அதை அவர் நாளை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

"இந்தியாவில் மட்டும் தான் மதச்சார்பின்மை பத்தி பேசுவீங்க. ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டில் பேசுங்களேன் பார்ப்போம்" என்று யாராவது ஒரு சங்கி கிளப்பிவிட்ட கேள்வியை, ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் அப்படியே நம்மிடம் வந்து ஒப்பிக்கும் அப்பாவிகளுக்காக...

கஜகஸ்தான் ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை நாடு. மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 71% கிருஸ்தவர்கள் 17% குறிப்பிட விரும்பாதோர் 9.5% நாத்திகர்கள் 2.3% இதர மதத்தினர் 0.2%

இஸ்லாமிய பெரும்பான்மை இருந்த போதும் கஜகஸ்தான் அரசியலமைப்பு தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அறிவித்துக் கொண்டுள்ளது. சும்மா பெயருக்கல்ல. உண்மையாகவே மதச்சார்பற்ற நாடு தான்.

அந்நாட்டு சட்டம் மக்கள் அனைவரும் அவரவர் மத சுதந்திரத்தோடு வாழ உறுதி அளிக்கிறது. ஆனால் அரசு இயந்திரம் முழுவதும் மதச்சார்பின்மையை மட்டுமே கடைபிடிக்க வலியுறுத்துகிறது. அந்த நாட்டு சட்டப்படி அரசு விவகாரங்களில் மதம் தலையிடக்கூடாது. உதாரணத்திற்கு அங்குள்ள கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் உள்ளிட்ட எதிலும் எந்த மத சடங்குகளும் கூடவே கூடாது. ஆனால் அவரவர் வழிபடும் இடங்கள் முழு சுதந்திரத்துடன் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் நம்மூரில் மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தில் இருக்கிறது. இங்கே தான் கட்டிமுடிக்கப்படாத #இராமர் கோவில் திறப்புக்கு நாடு முழுவதும் விடுமுறை விடப்படுகிறது. என்னங்க சார் உங்க சட்டம்.

ஆனால் கஜகஸ்தானில் பார்த்த காட்சிகள் முற்றிலும் வேறானவை. இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் அல்மாட்டி நகரின் பிரபலமான சுற்றுலா தலம் ஒரு #தேவாலையம். அதற்கு அடுத்த நிலையில் தான் அங்குள்ள #மசூதி இருக்கிறது. தேவாலயம் முதன்மை பெறக் காரணம் அதன் கலாச்சாரப் பாரம்பரியம். அங்கு மதம் அடுத்த நிலை தான்.

#Zenkovs_Cathedral எனும் Ascension Cathedral இரஷ்ய பேரரசின் காலத்தில் (1904 - 1907) கட்டப்பட்டது. கட்டிடக் கலைஞர் #Andrei_Zenkov வால் இது கட்டப்பட்டதால் அவரின் பெயரிலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்த தேவாலயம் முழுவதும் மரத்தால் கோர்த்து கட்டப்பட்ட இரஷ்ய பாரம்பரிய கட்டிடக்கலையை கொண்டது. மரத்தால் கட்டப்பட்ட உயரமான தேவாலயங்களில் இது முதன்மையானதும் கூட. பனி சூழ்ந்த பகலில் அதன் அழகு சொற்களால் சொல்ல இயலாது. தேவாலயத்தின் உள்ளே எத்தனை எத்தனை வண்ணங்கள். பெரும் பெரும் சுவர் ஓவியங்களும், கண்ணாடி ஓவியங்களும், நேர்த்தியான வடிவமைப்புகளும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதன் கட்டுமானம் பூகம்பத்தை தாங்கும் வகையில் தனித்துவமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஒரு முறை அந்நகரத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலும் உயிர் பிழைத்து இன்றும் அதே கம்பீரத்தோடு நிற்கிறது தேவாலயம். இந்த ஆலயம் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் வழிபடும் இடமாக உள்ளது.

அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அவ்வூரின் பெரிய மசூதி. 1999ல் தான் கட்டப்பட்டுள்ளது. தேவாலயத்தை விட பிரம்மாண்டமாக புதிய தொழில் நுட்பத்தோடு கட்டியிருக்கலாம். ஆனால் அப்படி கட்டவில்லை. ஒப்பீட்டளவில் அந்த தேவாலயத்தை விட மசூதி சிறிய அளவிலேயே கட்டப்பட்டுள்ளது. அதோடு அதன் கட்டுமானமும் இஸ்லாமியர்களின் நிதி உதவியால் கட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள நாட்டில் பார்க்கும் இடமெங்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. யார் #கிறிஸ்தவர், யார் #இஸ்லாமியர் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கலந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லா குடிமக்களும் தங்கள் மதச்சார்பின்மையை அறிவிக்கலாம், நாத்திகர்களாக பதிவு செய்து கொள்ளலாம் எனும் வாய்ப்புகளும் உள்ளது. இதுவெல்லாம் அந்நாட்டில் எப்படி சாத்தியமானது. ஒன்றே ஒன்று தான். அது சோவியத் அந்நாட்டிற்கு கொடுத்த கொடை. அதன் மூலம் பரவலாக்கப்பட்ட கல்வி அதில் முக்கியப் பங்கு வகித்தது. கல்வி வந்தால் #சாதி, #மதம் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கும்.

#அல்மாட்டி நகரில் மட்டும் 7000 இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். அதில் 95% வட இந்திய மாநிலத்தவர். நம்மை விட GDPயில் குறைந்த நாடு, ஆனால் அங்கே கல்விக்கு அவ்வளவு வாய்ப்பு. ஆனால் நம்மூர் GDP சதவிகித அடிப்படையில் மிக அதிகம். ஆனால் அது அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் தான் பெரிய வாய்ப்பாக உள்ளது.

இங்கே என்ன நடக்கிறது? பல லட்சம் கோடிகள் நகர் மேம்பாட்டிற்கு கொட்டப்பட்டு, தனி விமான நிலையம் வரை கட்டப்பட்டுள்ள #அயோத்தியில் இன்று வரை ஒரு நல்ல மருத்துவமனை கூட கிடையாது. உடல் நிலை சரியில்லை என்றால் #லக்னோ செல்லவேண்டும் என்று அம்மக்கள் சொல்கிறார்கள். நல்ல பள்ளிக்கூடமோ, ஒரு மருத்துவக்கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ எதுவும் கிடையாது. படித்தால் நீ எப்படி மசூதியை இடிக்க வருவ... அங்கே எப்படி கோவில் கட்ட வருவ... என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது இன்றைய இந்தியாவின் நிலை
😢

கார்ப்பரேட்டிடம் சொன்னால் டிமோவுக்கு???

 


வரும் 22 ம் தேதி டிமோ நடத்தும் அயோத்தி கோயில் திறப்பு எனும் அரசியல் கேலிக்கூத்து நாடகத்திற்காக அன்று மதியம் 2.30 மணி வரை அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள்.

இவரு பெருமையை டி.வி ல பார்க்க லீவு விடறாரு. மதியம் மூன்று மணி நேரம் மட்டும் எதற்கு அலுவலகம் போகனும்,  அரை நாள் லீவ் எடுக்கலாம் என்றால் எழவு ஒரு நாள் லீவ் பிடிக்கப்படுமாம். அயோக்கியத்தனமான அதிகார துஷ்பிரயோகம் இது. உன் பவுசை பார்க்க எனக்கு எதுக்கய்யா லீவு?

பொதுத்துறையெல்லாம் இறப்பதற்காக பிறந்தவை என்று அவற்றை அழித்துக் கொண்டிருக்கும் டிமோவே, யாரிடம் தரகுக்கூலி வாங்கிக் கொண்டு, இந்தியாவின் செல்வங்களை எல்லாம் தாரை வார்க்கிறேயே, அந்த கார்ப்பரேட் கம்பெனிகளை லீவ் விடச்சொல்லும் தைரியம் இருக்கிறதா உனக்கு?

சொன்னால் என்ன ஆகும்? யாருக்கு கோயில் திறப்பதாக அரசியல் செய்கிறாரோ, அந்த ராமர் காட்டுக்கு போன போது ராமரின் பிரதிநிதியாக எதை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி செய்தானோ, அதைக் கொண்டே அடி கிடைக்கும்.

எதைக் கொண்டு?

மேலே உள்ள படத்தை பார்க்கவும் . . .. 

Friday, January 19, 2024

முகமறியா தியாகிகள் நினைவாக . . .


சில வருடங்கள் முன்பாக நான் எழுதியிருந்த பதிவை செழுமைப்படுத்தி இன்று பகிர்ந்து கொண்டுள்ள தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 



 *நாளொரு கேள்வி: 19.01.2024*


தொடர் எண்: *1329*

*தியாகிகள் தினம்& ஆயுள் காப்பீட்டு தேசியமய நாள்* 

இன்று நம்மோடு வேலூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் *எஸ். இராமன்*
###########################

*அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்*

கேள்வி: ஜனவரி 19 தியாகிகள் தினத்தின் வரலாற்று பின்புலம் என்ன? 

*எஸ். ராமன்*

அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்...

இவர்களைப் பார்த்ததில்லை. இவர்கள் மரணம் பற்றியும் அவர்கள் மரணித்த நாளில் அறிந்ததில்லை. இத்தனைக்கும் இவர்கள் வாழ்ந்த அதே கீழைத் தமிழ்நாட்டின் பகுதியில்தான், இவர்கள் உயிரை காவல்துறை தோட்டாக்கள் குடித்த காலத்தில் நான் பள்ளி மாணவனாய் பனிரெண்டாவது வகுப்பில் அப்போது படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஒரு மிகப் பெரிய கொடூரம் பற்றி அன்றைய அதே மாவட்டத்தில் இருந்த  திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் படித்து வந்த நான் அறிந்திருக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு வேளை அங்கே போராட்டங்கள் நடத்தியிருக்கலாம். தட்டிகள் கட்டி வைத்திருக்கலாம்.  மக்களின் கோரிக்கைகளுக்காக நடத்துகின்ற போராட்டங்களை எப்படி நடுத்தர வர்க்க மக்கள் மௌனமாக இப்போதும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்களோ, அது போல  நானும் ஒரு வேளை அன்று அதை மௌனமாகக் கடந்து போயிருக்கலாம்.

அந்த கொடூர நிகழ்வு பற்றி நெஞ்சை பதற வைத்த அந்த சம்பவம் பற்றி எல்.ஐ.சி நிறுவனத்தில் இணைந்த பின்பே சங்கத்தின் மூலமாகவே அறிந்து கொண்டேன். 

ஏன் இந்த உயிர் பறிப்பு? காவல் துறையின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அவர்கள் இரையாக்கப்பட்டது எதற்காக? 42 ஆண்டுகளுக்கு பின்னால் செல்வோம். 

அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு 1982 ஜனவரி 19 ம் நாள் அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.

உலக வங்கியிடமும் பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் கடன் வாங்கிய இந்திய அரசு, அந்த கடனுக்காக அந்த அமைப்புக்கள் விதித்திருந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தொடங்கி இருந்த காலம். இன்று போலவே அப்போதும் அந்த நிபந்தனைகள் என்பது  உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களாகத்தான் அமைந்திருந்தது. வேலையின்மை அதிகரிப்பு, விலை வாசி உயர்வு, ஆலைகள் மூடல் என  தாக்குதல்கள் பன் முனைகளில்... பொதுத் துறைகள் மீதான தாக்குதலும் துவங்கிய காலம். 

இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைகின்றன. தலைநகர் டெல்லியை உலுக்கிய பேரணி நடைபெறுகின்றது.  1982 ஜனவரி 19 ம் நாள் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்ற அறைகூவல் விடப்படுகிறது.

வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களில் காவல்துறை குண்டாந்தடிகள் ஆவேச தாக்குதல் நடத்துகிறது.

இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமெய்ஞானம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் களமிறங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மறுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.
அஞ்சான் நாகூரான் எனும் இரண்டு விவசாயக் கூலித் தொழிலாளர்களை கொன்று தன் வெறியை அவர்களின் குருதியில் தணித்துக் கொண்டது. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி என்ற கடமையை நிறைவேற்றிய திருப்தி அதற்கு... அதுபோல மன்னார்குடி அருகில் உள்ள இரட்டைப் புளி கிராமத்தில் ஞானசேகரன் என்ற விவசாயத் தொழிலாளி உயிரையும் தோட்டாக்கள் பறித்தன. 

தியாகிகளின் மூவரின் புகைப்படங்கள் கிடைக்குமா என்று  இணையத்தில் தேடிப்பார்க்கிறேன். கிடைக்கவில்லை. அவர்களின் முகம் அறியாவிட்டாலும் கூட தமிழக உழைப்பாளி வர்க்கம் அவர்களை மறக்கவில்லை. அவர்களின் தியாகத்தை மறக்கவில்லை. 

சி.ஐ.டி.யு அமைப்பு 19 ஜனவரியை ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.

இன்று ஆயுள் காப்பீடு தேசிய மய நாள். பொதுத் துறையின் தாய் போன்று விளங்கும் மகத்தான நிறுவனமான எல்.ஐ.சியின் அரசு நிறுவனம் என்ற அந்தஸ்தை பாதுகாக்க வேண்டிய கடமை முன்னிற்கும் நேரம். இந்த தியாகம் பொதுத் துறை பாதுகாப்பு என்ற இலட்சியத்திற்கு உரமாகும். 

வரலாறு கற்றறியா சமூகம் உயிரற்ற உடலுக்கு சமம். இன்றும் கூட பஞ்சப்படி உள்ளிட்ட பயன்கள் மற்றும் உரிமைகள் தொடர்வதற்கு அகில இந்திய வேலை நிறுத்தங்களும், அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் போன்ற சாமானிய உழைப்பாளிகளின் உயிர்த் தியாகமும் காரணம் என்று அறியா வெள்ளைக் காலர் தொழிலாளர்கள் நிறைய பேர் இன்றும் உள்ளனர். 

தியாகிகள் தினம் இன்று... தொழிலாளர் விவசாயிகளின் கூடல் குறித்து நாம்

பகிர்வோம். நிமிர்வோம்! 

*செவ்வானம்*

ராம் கி பாடி - அர்த்தமே வேறடா

 


அயோத்தியில் டிமோ அரசு வைத்துள்ள பலகைகள் கீழே . . .



முன்னாடி படேல் சிலைக்கு தமிழில் "ஸ்டேட்டுக்கே ஓப்பி யுனிட்டி" என்று தமிழாக்கம் செய்த அதே தமிழறிஞர்தான் (Micro Irrigation என்பதை சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்த எச்.ராசாவாக இருக்குமோ)   "ராம் கி பாடி" யை கண்டு பிடித்திருக்க வேண்டும்.

அடேய்களா, உங்கள் தமிழ்க்கொலை கொடுத்துள்ள விபரீத அர்த்தம் புரிகிறதா இல்லையா?

புரியவில்லையென்றால் மேலே உள்ள படத்தை பார்க்கவும். இப்போதும் புரியாதவர்கள் "சாமி" படத்தை பார்க்கவும்.

பாவம்யா ராமரு!

Thursday, January 18, 2024

தாகூரும் தேச விரோதியா டிமோ?

 


மூன்றாண்டுகள் முன்பாக ஒரு மேற்கு வங்கத் தோழர் ரவீந்திரநாத் தாகூர் 120 வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதையை அனுப்ப, நானும் அதை தமிழாக்கம் செய்து 20.08.2020 அன்று பகிர்ந்திருந்தேன்.

தாகூர் யாருக்கு சொன்னாரோ என்ற அப்பதிவின் இணைப்பு இங்கே

இரண்டு நாட்கள் முன்பாக ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கரும் அக்கவிதையை மொழிபெயர்த்து முகநூலில் பதிவு செய்திருந்ததை பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது.

மசூதியை இடித்து விட்டு டிமோ ராமருக்கு கோயிலுக்கு கட்டும் இன்றைய கேலிக்கூத்துக்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது கவிதை என்பதுதான் மிகப் பெரிய அதிசயம்.

ஒருவேளை தாகூர் இன்று உயிரோடு இருந்திருந்து அக்கவிதை இப்போது எழுதப் பட்டிருந்தால் டிமோ அவரையும் பீமா கொரேகான் வழக்கு என்று கதை கட்டி பல செயற்பாட்டாளர்களை சிறையில் வைத்தது போல தாகூரையும் தேசத் துரோகச்சட்டத்தில் சிறையிலடைத்திருப்பார்.

ஆமாம். அக்கவிதை அவ்வளவு காத்திரமானது.

அவசியம் படியுங்கள்

அந்தக் கோயிலில் கடவுள் இல்லை
சொன்னார் ஒரு சாது. 

கடவுள் இல்லையா?

தங்கத்தில் மின்னும் விக்கிரகம்  
அமர்ந்துள்ள அரியாசனம் மட்டுமே
விலை மதிப்பற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்டு
பிரகாசிப்பதைப் பார்த்துமா
கோயில் காலியாய் உள்ளதென்று உரைக்கிறாய்

கோபத்துடன் கேட்டான் அரசன்.

அது காலியாய் இல்லை அரசே,
அங்கே உங்கள் அரசின்

செல்வச்
 செருக்கு
 நிரம்பிஇருக்கிறது.

உங்களைத்தான்
 சிறப்பாய்
காட்சிப்படுத்தியுள்ளீர்கள்,

இந்த உலகின் கடவுளை அல்ல

பதில் சொன்னார் சாது.

வானத்தை முத்தமிட்டு நிற்கும்
கோபுரம் கொண்ட கோயிலுக்காக

இருபது லட்சம் பொற்காசுகளை

மழையாய் பொழிந்தேன்.

அனைத்து சடங்களுக்குப் பிறகு

நான்கடவுள்களுக்கு அளித்த

காணிக்கை ஏராளம்.

 
இத்தனை பிரம்மாண்டமான கோயிலில்
கடவுள் இல்லை என்று சொல்ல 
என்ன துணிச்சல் உமக்கு
கொந்தளித்தான் அரசன்.


சாது நிதானமாய் பதிலளித்தார்.
அதே வருடத்தில்தான் 
உம் குடிமக்களில் இருபது லட்சம் பேர்
கடும் பஞ்சத்தால் அவதியுற்றனர்.


றுமையில் தவித்த அம்மக்கள்
உணவின்றிஉறைவிடமின்றி
உன் கதவோரம் அடைக்கலம் நாடி
உதவி கேட்டு கதறி அழுதனர்.


ஆனால் அவர்களோ
உன்னால்  துரத்தப்பட்டனர்.

காடுகளிலும் குகைகளிலும்
சாலையோரங்களிலும் 
பாழடைந்த
 பழைய கோயில்களிலும்
வேறு வழியின்றி தஞ்சம் புகுந்தனர்.

இருபது லட்சம் தங்கக்காசுகளைக் கொட்டி

யாருக்காக என்று சொல்லி

ஒரு பிரம்மாண்டமான கோயிலைக் 
கட்டினாயோ
  அன்றுதான்
அக்கடவுள் சொன்னார்.

நான்  நித்தம் வசிக்கும் வீடு

நீல வானின் நடுவே

மின்னும் விளக்குகளால்தான்
 
ஒளியேற்றப்படுகிறது.
என் இல்லத்தின் அடித்தளம்
உண்மை
சமாதானம்கருணைஅன்பு
ஆகிய மதிப்பு மிக்க பொருட்களால்
அமைக்கப்பட்டது
.
வீடற்ற தன் குடிமக்களுக்கே
அடைக்கலம்
 தர இயலாத,
இதயத்தில் வறுமை படைத்த
அக்கஞ்சனால்
 நிஜமாகவே
எனக்கு ஒரு இருப்பிட த்தை
அமைக்க
 முடியுமா என்ன?”
 என்று கேட்டு
  
அந்த நாளில்தான் கடவுள்
நீ கட்டிய கோயிலிலிருந்து வெளியேறி
சாலையோரத்தில்
 மரத்தடிகளில்
வாழும் அந்த வறிய மக்களோடு
இணைந்து கொண்டார்.

விரிந்த கடலின் நுரையின்
 வெறுமையைப் போலவே
 
உன் கோயிலும் வெற்றிடம்தான்.
செல்வச் செறுக்கின் நீர்க்குமிழி மட்டும்தான்.”

 கோபமுற்ற அரசன்

உரத்த குரலில் அலறினான்

 அற்பப் பதரே
உடனே என் நாட்டிலிருந்து வெளியேறு

மீண்டும் சாது நிதானமாகச் சொன்னார்.

“ தெய்வீகத்தை எங்கிருந்து வெளியேற்றினாயோ,
 அங்கிருந்து  பக்தர்களையும்
 
தயவு செய்து வெளியேற்றிவிடு