Friday, June 4, 2021

பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல நீதியரசர்களே!

 


நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு அபூர்வமான தீர்ப்பை அளித்துள்ளது.

பத்திரிக்கையாளர் வினோத் துவா மீது பதியப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம்

"அரசின் செயல்பாட்டின் மீது, ஆட்சியாளர்களின் நடவடிக்கை மீது மிகக் கடுமையான விமர்சனத்தை முன் வைப்பது தேசத் துரோகம் ஆகாது. தேசத்தின் அமைதியை வன்முறைச் செயல்கள் மூலம் சீர்குலைப்பதும், ஆட்சியை கடுமையாக கண்டிப்பதும் ஒன்றாகாது. அப்படி விமர்சனம் செய்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவது என்பதெல்லாம் சரியல்ல என்று உச்ச நீதிமன்றம் 1962 லேயே மிகத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. எனவே ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் வைத்ததற்காக பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கை தள்ளுபடி செய்கிறோம்"

இதுதான் அந்த தீர்ப்பின் முக்கியமான சாராம்சம்.

கூடவே இன்னொன்றும் சொல்லியுள்ளார்கள்.

"தேசத் துரோக வழக்கு பதிவதிலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்"

என்றும் சொல்லியுள்ளார்கள்.

நீதியரசர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பணிவோடு சொல்ல வேண்டியுள்ளது.

இன்றைய ஒன்றிய அரசை நடத்தும் ஆட்சியாளர்கள் காட்டு மிராண்டிக் கூட்டத்தவர், மத வெறி பிடித்தவர்கள், பெரு முதலாளிகளுக்கு தரகு வேலை செய்யும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையுமே நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவராலும் கடுமையாக கண்டிக்கப்படும். அதற்கு எதிராக போராடுகிறார்கள்.

அதனால் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமே பாதுகாப்பு தேவை என்பதையும் மனதில் கொண்டு உங்கள் தீர்ப்பின் வாசகங்களை கொஞ்சம் மாற்றுங்கள் சார். 

Thursday, June 3, 2021

தமிழகம் - ஆணியே வேண்டாம் மாலன்

                                  

மூத்த பத்திரிக்கையாளர் முக நூல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் கீழே உள்ளது. 




"தமிழ் நாடு" என்ற நம் மாநிலத்தின் பெயரை "தமிழகம்" என்று மாற்ற வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது.

"முசல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தேலே தெரியும்" என்ற சொலவடைக்கு ஏற்ப இந்த வார்த்தை வியாபாரி ஏன் இப்போது பிரச்சினையை உருவாக்குகிறார் என்பதை தெளிவாக சொல்ல முடியும்.

தமிழ் நாட்டில் உள்ள நாடு அவர்களுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. எங்கே தனி நாடாக அறிவித்துக் கொண்டு விடுவார்களோ என்ற கற்பனை அந்த அச்சத்தை அதிகப்படுத்துகிறது. தட்சிணப் பிரதேசம் என்றெல்லாம் பெயரை மாற்றினால் மரண அடி விழும் என்று தெரியும். அதனால் தமிழகம் என்று மாற்றலாமா என்று ஒன்றிய அரசில் உள்ள குரங்குகள் மூத்த பத்திரிக்கையாளர் வடிவில் உள்ள குரங்குக்குட்டி மூலமாக ஆழம் பார்க்க முயற்சிக்கின்றன.

தமிழகம் என்பதை பெரும்பாலும் அனைவருமே இயல்பாகவே பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனாலும் எப்போது சங்கிகள் இப்படி சொல்கிறார்களோ, நாம் மிகவும் எச்சரிக்கையோடு இனி எப்போதும் "தமிழ்நாடு" என்பதையே பேசும் போதும் எழுதும் போதும் பயன்படுத்த வேண்டும்.








புதுவைக்கு பொங்குங்கய்யா

 


தமிழக அரசை கலைக்க வேண்டும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவர் பதவியேற்ற நாள் முதலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதே நேரம் புதுவை பற்றி அவர்கள் வாய் திறப்பதே இல்லை.

 புதுவையில் ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்றாரே தவிர அங்கே அமைச்சரவை இன்னும் பதவியேற்றகவில்லை.

 முதலமைச்சரும் கொரோனா தொற்று என்று கதவை சாத்திக் கொண்டு விட்டார்.  பத்து தொகுதிகளில் ரங்கசாமி காங்கிரஸும் ஆறு தொகுதிகளில் பாஜகவும் வென்றது. மூன்று பாஜக காரர்களை நியமன எம்.எல்.ஏ க்களாக்கி ஆறை ஒன்பதாக்கினார்கள். மூன்று சுயேட்சைகளை சேர்த்து ஒன்பதை பனிரெண்டாக்கி, உங்களை விட நாங்கள் இரண்டு அதிகம் என்று சொல்ல, முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்றவற்றை விட மருத்துவமனையே பாதுகாப்பானது என்று முதல்வர் நினைக்கிறார் போலும்.

 அங்கே ஆட்சி என்ற ஒரு நடைபெறவே இல்லை என்பதைப் பற்றி சங்கிகள் கவலைப்பட மாட்டார்களா? ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்ல மாட்டார்களா?

 உண்மையில் அந்த முதல்வர் பதவியை அவரிடமிருந்து பறிக்கவே முயல்கின்றனர் என்பதுதான் உண்மை. ராஜினாமா செய் என்று சொல்லாமல் அதற்கான நிலைமையை அவருக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்ககள் என்பதும் உண்மை.

 ரங்கசாமிக்கும் இது தேவைதான்.

 

Wednesday, June 2, 2021

ராஜா 45 - நான் கேரண்டி

 
 


இளையராஜா இசையமைப்பாளராகி 45 ஆண்டுகள் நிறைவுற்றதாக சில நாட்கள் முன்பாக பலரும் பதிவிட்டிருந்தனர்.

 ராஜாவின் 45 ஆண்டுகளை 45 பாடல்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். பிரபலமான 45 பாடல்கள் என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முக்கியமான பாடல் என்று தொகுக்க விரும்பினேன். இது வரை நான் பகிர்ந்து கொள்ளாத பாடல்களாக இருக்க வேண்டும் என்று கொஞ்சம் மெனக்கெட்டேன். ராஜா முதலில் பதிவு செய்த “அன்னக்கிளியே உன்னை தேடுதே தவிர பெரும்பாலானவை இந்த வலைப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படாத பாடல்கள்.  அதனால்  கொஞ்சம் தாமதமான பதிவு இது. அவருடைய பிறந்த நாளன்றாவது பகிர்ந்து கொள்வேமே என்று இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

 2005 க்குப் பிறகு ராஜாவிற்கு ஒரு சரிவு இருந்தது என்பதை இப்பதிவுக்கான தரவுகளை தேடுகையில் தெரிந்தது. சில வருடங்களில் சொல்லிக் கொள்ளும் படி ஒரு தமிழ்ப்ப் பாடல் கூட இல்லாததால் அந்த வருடங்களை அப்படியே கடந்திருப்பேன்.

 45 வருடங்களிலிருந்தும் பாடல்கள் வேண்டுமென்று திட்டமிட்டாலும் அது இயலாமல் போய் விட்டது. அதை ஈடு செய்ய சில பின்னணி இசை கோர்வைகளையும் சேர்த்தேன். ஆனால் அதிகபட்ச அளவு தாண்டி விட்டது என்று ப்ளாக்ஸ்பாட் சொன்ன காரணத்தால் தேர்வு செய்து வைத்திருக்கிற பின்னணி இசைக் கோர்வைகளை நாளை பதிவு செய்கிறேன்.  அளித்துள்ளேன்.

  நம் காலத்தின் மகத்தான இசை மேதை இளையராஜா என்பதை வருடங்கள் கடந்த பின்பும் நிற்கும் அவரது பாடல்கள் உணர்த்துகின்றன. பின்னணி இசையில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கூட. . . .

மேலே பகிர்ந்து கொண்ட  படம் எங்கள் புதுவை 2 கிளை தோழர் எஸ்.செல்வராஜ் அவர்களின் மகன் செல்வன் அனீஷ் பாரதி வரைந்தது.

இசையென்ற இன்ப வெள்ளத்தில் நீங்கள் மூழ்குவீர்கள் என்பதற்கு நான் கேரண்டி





 

1976 அன்னக்கிளியே உன்னைத் தேடுதே

 


 

1977  வாழ்வே மாயமா?


 

 1978 – ஒரு வானவில் போலவே

 


 

1979 – அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்

 


 

1980 – கொத்த மல்லி பூவே

 


 

1981 – கூந்தலிலே மேகம் வந்து

 


 

1982 – பூவே, இளைய பூவே

 


 

1983 – இசை மேடையில், இன்ப வேளையில்

 


 

1984 – ரோஜா ஒன்று

 


 

1985 – ராஜா மகள், ரோஜா மலர்

 


 

1986- இளஞ்சோலை பூத்ததா?

 


 

1987 – சின்ன சின்ன ரோஜாப்பூவே

 


1988 – தேன் மொழி, எந்தன் தேன் மொழி

 


1989 – பூங்காற்று உன் பேர் சொல்ல

 


 

1990 – குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதடி


 

1991 – பூங்காவியம், பேசும் ஓவியம்


 

1992 – யாரும் விளையாடும் தோட்டம்


 

 1993 – தில்லுபரு ஜானே – தில்லு தீவானே

 


1994 – மலைக்கோயில் வாசலிலே

 


 1995 – உல்லாச பூங்காற்றே


 

 

1996 – என் பாட்டு என் பாட்டு

 


1997 -  தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்


 

1998 – மாலை என் வேதனை கூட்டுதடி

 


 1999 - ஊருக்கு தெக்கே



2000 – நிலவு பாட்டு நிலவு பாட்டு


 

 

2001 – மஞ்சள் பூசும் மாலை வேளை

 


 2002 – ஒளியிலே தெரிவது

 


 2003 – இளங்காத்து வீசுதே

 


 

2004 – கொம்புல பூவை சுத்தி

 


 

2005 -  காற்றில் வரும் கீதமே

 


 

2009 – ஓம் சிவோஹம்

 


 

2010 – தாலாட்டு கேட்க நானும்



2011 – பூவக் கேளு, அந்த காத்தை கேளு

  


 2012 – என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்


 

2016  இடர் வரினும் . . .என் உள்ளம் . . .


 

2020 – உன்ன நெனச்சு நெனச்சு


 



சங்கிங்க நெனப்புதான் . . .

  


கீழே உள்ளது “மத்யமர்” குழுவில் ஒரு சங்கியின் பதிவு.



 “நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்”  என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர்.

 ஆனால் இங்கே சங்கிகளின் நெனப்பு நாட்டை கெடுப்பதாக உள்ளது.

 கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளை வென்ற மிதப்பாலும் ஸ்டாலின் திரும்பப் போக வேண்டும் என்பதை உ.பி,ம.பி,பீகார், மகாராஷ்டிரா சங்கிகள் உதவியோடு ட்ரென்டிங் ஆக்கிய திமிராலும்  இப்போது தனி மாநில கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.

பாஜக கட்சியின் ரியல் எஸ்டேட் புரோக்கர் அணி போல இருக்கிறது. 

 தமிழகத்தின் 39 தொகுதிகளில் 38 ஐ வென்றதாலும் “கோ பேக் மோடி” என்பதை எப்போதும் சர்வதேச அளவில் ட்ரெண்டிங் ஆக்குவதால் தமிழ்நாட்டை தனி நாடாக பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கலாமா சங்கிகளே!

உங்களுக்காகத்தான் வடிவேலு "ரத்தம், தக்காளிச் சட்னி" என்று சொல்லி விட்டுப் போயுள்ளார். 

Tuesday, June 1, 2021

பெருமையில்லை மிஸ்டர், அசிங்கம்

 


கொரோனா தடுப்பூசி கைவசம் இருப்பதற்கு ஹரியானா முதல்வர் விளக்கத்தை வேறு எப்படி சொல்வது?



அவ்ளோ பெரிய அப்பாடக்கரா அவரு?

 


மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் 31.05.2021 அன்று ஓய்வு பெற வேண்டும். அவருக்கு பணி நீட்டிப்பு கேட்கிறது மாநில அரசு. மூன்று மாதம் கொடுக்கிறது மத்தியரசு.

இடையில் மம்தா - மோடி பிரச்சினை நாடகம் நடந்ததால் அந்த த.செ வை டெல்லிக்கு மாற்றுகிறது மத்தியரசு. 

அதெல்லாம் முடியாது. அவர் இங்கேதான் இருப்பார் என்று அடம் பிடிக்கிறது மம்தா ஆட்சி.

நாங்க போட்ட ஆர்டர் போட்டதுதான், அவரு டெல்லிக்கு வந்தே ஆகனும்னு முரண்டு பிடிக்குது மோடி அரசு.

எனக்கு உங்க பதவி நீடிப்பே வேணாம், நான் இன்னிக்கே ரிடையர் ஆகறேன்னு த.செ ரிடையராகிட்டாரு.

அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீதான் எனக்கு மூன்று வருஷத்துக்கு தலைமை ஆலோசகர்னு பதவி கொடுத்துட்டாங்க மம்தா.

டெல்லிக்கு வராம ரிடையரான உன் மேல ஒழுங்கு நடவடிக்கை பாயும்னு சொல்லுது மத்தியரசு.

ஆமாம் மத்தியரசும் மாநில அரசும் இப்படி அடிச்சுக்கற அளவுக்கு அந்த த.செ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

அதெல்லாம் இல்லை.

மோடியும் சரி, அந்த லேடியும் சரி, இருவருமே கேடிகள், கிரிமினல்கள். அடித்துக் கொள்வது போல நடிக்கவும் செய்வார்கள், அடிக்கவும் செய்வார்கள். இருவருக்கும் எந்த நெறிமுறைகளோ, ஜனநாயக அமைப்புக்களின் மீது நம்பிக்கையோ கிடையாது.

ரௌடிகள் கூட்டம் மோதிக் கொள்ள இப்போது கிடைத்துள்ள காரணம் த.செ. அவ்வளவுதான்.