Thursday, December 25, 2025

மனமெல்லாம் அங்கேதான் . . .

 


நிலப்பிரப்புத்துவ கொடுமைகளுக்கு எதிராக செங்கொடியின் கீழ் அணிவகுத்து தீரத்துடன் போராடிய தோழர்களை பழி வாங்க, முக்கியமான ஆண் தோழர்கள் ஊரில் இல்லாத சூழலில் கோபால கிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார் வெறியன் தலைமையில் அடியாட்கள் குடும்பம் நடத்திய தாக்குதலில் 44 மனித உயிர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட நாள் இன்று. 

செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வருடம் தோறும் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த கூடுவார்கள்.

2004 ம் வருடம் தொடங்கி ஒவ்வொரு வருடமும் வெண்மணி சென்றுள்ளேன். சர்க்கரை அப்போதுதான் எட்டிப்பார்த்த 2019 மற்றும் கொரோனா காரணமாக 2020 ஆகிய இரண்டு வருடங்கள் மட்டும் செல்ல இயலவில்லை.

கெடுவாய்ப்பாக இந்த வருடம் செல்ல இயலவில்லை. மே மாதம் நடந்த விபத்தின் காரணமாக வெண்மணி ஆர்ச்சிலிருந்து நினைவாலயம் வரை நடந்து செல்ல முடியாது. மேலும் புவனேன்ஸ்வரில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டிற்காக நாளை புறப்பட வேண்டும். உடல் நிலை பிரச்சினை இல்லாமல் இருந்திருந்தால் இரண்டாவது காரணம் கூட பெரிதல்ல.  வெண்மணி யின் கண்மணிகள் செய்த தியாகத்தை ஒப்பிடுகையில் பயணத்தால் உருவாகும் களைப்பெல்லாம் பெரிதே கிடையாது.

வெண்மணிக்கு செல்ல முடியாவிட்டாலும் மனம் என்னமோ அங்கேயேதான் இருக்கிறது. 


No comments:

Post a Comment