ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மோடி ஒரு விருந்து கொடுக்கிறார். தாமோதர் தாஸ் சேர்த்து வைத்த சொத்திலிருந்து அல்ல, பிரதமராக இந்திய கஜானாவிலிருந்துதான்.
நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு அழைப்பு கிடையாது.
மாநிலங்களவையின் எதிர்க்கட்சித்தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் அழைப்பு கிடையாது.
ஆனால் ஏதோ ஒரு நாடாளுமன்ற ஜும்லா குழுவின் தலைவராக உள்ள சசி தரூருக்கும் மட்டும் அழைப்பு உண்டு.
தன் கட்சியில் தன்னௌ விட உயர்ந்த பொறுப்புக்களில் உள்ளவர்களை அவமானப்படுத்து விட்டு தன்னை மட்டும் அழைப்பது கட்சிக்குள் சிண்டு முடிக்கும் வேலை என்று சசி தரூர் கண்டித்திருக்க வேண்டும். விருந்தை புறக்கணித்திருக்க வேண்டும்.
ஆனால் . . .
எனக்கான அழைப்பு, எனக்கான கௌரவம் என்று சொல்லிக் கொண்டு விருந்தில் கலந்து கொண்டு விட்டார், கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் . . .
என்ன இருந்தாலும் அவரது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க மோடிதானே உதவினார்!
எல்லா காலங்களிலும் எட்டப்பர்கள் வாழ்கிறார்கள்.


No comments:
Post a Comment