தமிழ்நாட்டின் முக்கியமான இசையமைப்பாளர் அவர். இப்போது நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் இருக்கிறார்.
அவரிடம் அனுமதி வாங்காமல் அவருடைய பாடல்களை, இசை கோர்ப்புகளை பயன்படுத்தியும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்தியும் பலர் பணம் பார்ப்பதால் அவரது பெயரையோ, புகைப்படத்தையோ, வழக்கமாக அவரை அழைக்கப்படும் பட்டங்களான இ..........னி, மே..........ரோ, ரா........ன், ரா...........ர் ஆகியவற்றையும் யாரும் திரைபடங்களிலோ, தொலைக்காட்சிகளிலோ, யூட்யூப் நிகழ்வுகளிலோ, எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலோ யாரும் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று தடை வாங்கியுள்ளார்.
எங்கள் சங்கத்தின் அச்சுப்பணிகளை செய்யும் அச்சகத்தில் டிசைனராக இருந்தவர் பெயர் இ......ஜா. நல்ல வேளை இப்போது அவர் வேறு ஊரில் சொந்த அச்சகம் துவங்கி விட்டார். இல்லையென்றால் அவரை நான் எப்படி அழைப்பேன்?
உங்கள் பாடல்களை வணிக நோக்கில் அனுமதியின்றி பயன்படுத்த தடை வாங்குவது என்பது ஒரு பிரச்சினை.
ஆனால் உங்கள் பெயர், புகைப்படம், உங்களுக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள் ஆகியவற்றைக் கூட யாரும் பயன்படுத்தக்கூடாது என்றால்
உங்களிடம் வேறு ஏதோ பெரிய சிக்கல் இருக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் வக்கீல்கள் காசு பார்க்கிறார்கள். நீங்கள் உண்மையிலேயே விழித்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.

Very correctly said
ReplyDelete