Tuesday, September 30, 2025

மொழிபெயர்ப்பு தினம் - செல்ஃபி வாழ்த்து

 


எச்சரிக்கை : இது ஒரு தற்பெருமை பதிவு  😝😝😝😝😝

இன்று உலக மொழிபெயர்ப்பு தினம். சில வாழ்த்துக்களைப் பார்த்தேன். தோழர்கள் ச.சுப்பாராவ், விஜயசங்கர் ராமச்சந்திரன், கி.ரமேஷ், இ.பா.சிந்தன் போல பெரிய பெரிய புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்யாவிட்டாலும் சங்கச் சுற்றறிக்கைகள், இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழின் கட்டுரைகள், சில அமைப்புக்களின் அறிக்கைகள் என்று நானும் கொஞ்சம் கொஞ்சம் மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.




எங்கள்  வேலூர் கோட்டத்தின் சார்பில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பிரசுரங்களின் அட்டைப்படங்கள்தான் மேலே உள்ளது.

முதல் பிரசுரத்தில் ரோஹித் வெமுலாவின் இறுதிக்கடிதம், கன்னையா குமாரின் உரை, இன்சூரன்ஸ் வொர்க்கரில் தோழர் அமானுல்லா கான் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் தமிழாக்கம் உள்ளது. கன்னையா குமார் உரையை தமிழாக்கம் செய்தவர் தோழர் விஜயசங்கர். மற்றவை என் முயற்சி.

1985 ல் இந்தோரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் தோழர் சுனில் மைத்ரா நிகழ்த்திய உரையை நான் தமிழாக்கம் செய்திருந்தேன்.

மூன்றாவது பிரசுரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியமான போராட்டமான கதவடைப்பிற்கு எதிரான போராட்டம் பற்றியது. தோழர்கள் சுனில் மைத்ரா, சந்திர சேகர் போஸ், அமானுல்லா கான் ஆகியோரின் கட்டுரைகள், இன்சூரன்ஸ் வொர்க்கரில் அப்போதும் இந்திய குடியரசு தினம் பற்றி கடந்த ஆண்டும் வெளியான தலையங்கள்கள். தோழர் அமானுல்லா கானின் கட்டுரையை கோவைக் கோட்ட பொதுச்செயலாளர் தோழர் கே.துளசிதரன் தமிழாக்கம் செய்திருந்தார். மற்றவை எனது முயற்சி.

மொழிபெயர்ப்பாளர் என்று மற்றவர்கள் கூறுமளவிற்கு இவை போதுமானதல்ல.

அதனால் கன்னி ராசி படத்தில் கவுண்ட மணி அவர் படத்திற்கு அவரே மாலை போட்டது போல மொழிபெயர்ப்பு தினத்திற்கு நானே எனக்கு வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். 




No comments:

Post a Comment