பபூபென் ஹசாரிகா - இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவர். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் பாடகராக, இசை அமைப்பாளராக, இயக்குனராக முத்திரை பதித்தவர். 2011 ல் இறந்து போனவர்.
2019 ல் அவருக்கு மோடி அரசு பாரத ரத்னா விருது கொடுத்தது. 2021 ல் அஸ்ஸாமில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
நேற்று முன் தினம் பச்சைக் கொடி ஆட்டி ரிப்பன் வெட்ட அஸ்ஸாம் போன மோடி புதிதாக ஒரு கதை விட்டார்.
"பூபென் ஹசாரிகாவிற்கு பாரத ரத்னா விருது கொடுத்த போது பாடகர்களுக்கும் நடனம் ஆடுபவர்களுக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கிறார் மோடி" என்று காங்கிரஸ் தலைவர் பேசிய காணொளியை அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் காண்பித்தார்" என்று பேசிய மோடி பூபென் ஹசாரிகாவை காங்கிரஸ் இழிவு படுத்தி விட்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
எந்த தலைவர்? எப்போது பேசினார்? என்றெல்லாம் மோடி சொல்லவில்லை. மோடிக்கு காணொளியை காண்பித்ததாக சொல்லப் பட்ட ஹிமாந்த பிஸ்வாஸ் மிகப் பெரிய மோசடிப் பேர்வழி. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஊழல்வாதி என்று மோடியால் குற்றம் சுமத்தப்பட்டு கட்சி மாறிய பின் பாஜக வாஷிங் மெஷினில் புனிதமாக்கப் பட்டு முதலமைச்சர் பதவி பெற்றவர். அவர் யோக்கியதையே பெரிய கேள்விக்குறி.
பூபென் ஹசாரிகா உயிருடன் இருக்கையில் காங்கிரஸ் அவருக்கு
பத்மபூஷன்,
தாதா சாஹேப் பால்கே விருது,
சங்கீத நாடக அகாடமி விருது,
நியமன மாநிலங்களவை விருது
ஆகியவற்றை அளித்துள்ளது.
அவர் 2011 ல் இறந்த பின்பு 2012 ல் பத்ம விபூஷன் விருதும் அளித்துள்ளது.
இத்தனை விருதுகளை அளித்த காங்கிரஸ் எப்படி அவரை இழிவுபடுத்தும்?
மேலும்
பண்டிட் ரவிசங்கர்,
பீம்சென் ஜோஷி,
எம்.எஸ்.சுப்புலட்சுமி
பிஸ்மில்லாகான்
லதா மங்கேஷ்கர்
போன்ற இசைக் கலைஞர்களுக்கு பாரத் ரத்னா விருது கொடுத்துள்ளது. அவர்கள் எப்படி பாடகர்களுக்கும் நடனமாடுபவர்களுக்கும் விருது கொடுப்பதை இழிவு படுத்துவார்கள்.
மொத்தத்தில் இது மோடியின் வழக்கமான அற்ப அரசியல்...
No comments:
Post a Comment