இப்படித்தான் வெறுப்பை விதைக்கிறார்கள் என்பது சில நாட்கள் முன்பு எழுதிய பதிவு. மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நடந்த ஒரு விஷப் பிரச்சாரம் குறித்த பதிவு. அந்த நச்சுத்தனமான பதிவை அகற்ற வேண்டும் என்று முகநூலிடம் ரிப்போர்ட்டும் செய்திருந்தேன்.
அதற்கு ஒரு பதில் வந்துள்ளது.
பொய்ப் பிரச்சாரம் செய்து மத வெறியைத் தூண்டும் அந்த நச்சுப் பதிவு முகநூலின் சமூகத்தரத்திற்கு எதிரானது கிடையாதாம். அதனால் அந்த பதிவை நீக்க மாட்டார்களாம்.
அடப்பாவி மார்க்கு!
நீட் தேர்வு வேண்டாம் என்றால்,
அமெரிக்க இந்தியர்களின் வேலை வாய்ப்புக்களுக்கு ட்ரம்பால் ஆபத்து என்றால்
வினீஷ் போகத்தை பாராட்டினால்
சமூகத் தரத்திற்கு எதிரானது என்று சொல்லி பதிவை நீக்குகிறது முகநூல். ஆனால் சங்கிகளின் அயோக்கியத்தனத்திற்கு சாமரம் வீசுகிறது.
அப்படியென்றால் சங்கிகளின் கீழ்த்தரம்தான் முகநூலின் சமூகத்தரம்!
என்ன மார்க்கு சரியா?
No comments:
Post a Comment