அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த கூட்டம், அடுத்து வாரணாசி ஞானவாபி மசூதியையும் மதுராவில் உள்ள மசூதியையும் குறி வைத்தது. ஞானவாபி மசூதிக்குள் இருக்கும் வாட்டர் ஃபவுண்டனை சிவலிங்கம் என்றது. ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டது. ஓய்வுக்கு பிந்தைய பதவிக்கான பேரத்தில் ஒரு மாவட்ட நீதிபதி ஓய்வு பெறும் நாளன்று சங்கிகளுக்கு ஆதரவான தீர்ப்பு ஒன்றை அளித்து அடுத்த பதவியை தட்டிக் கொண்டார்.
வாரணாசி. மதுரா வோடு சங்கிகளின்வெறி அடங்கிடவில்லை. இதோ அடுத்த சர்ச்சைக்கு அடி போட்டு விட்டனர்.
மொட்டைச்சாமியாரின் உத்திர பிரதேச மாநிலத்தில் சம்பல் என்ற ஊரில் உள்ள ஐநூறு வருட பழைய மசூதி மீது குறி வைத்துள்ளார்கள், தொடர்ந்து வழிபாடு நடந்து கொண்டிருக்கும் மசூதி அது. வழக்கம் போல கோயில் உள்ள இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று பிரச்சினையை ஆரம்பித்தார்கள்.
வாரணாசி பிரச்சினையில் கேஸ் போட்ட அதே சங்கி இங்கேயும் வழக்கு தொடுக்க ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நீதிபதி, அடுத்த பணிக்கான நுழைவுத்தேர்வாக தீர்ப்பை எழுதினார். ஆய்வு செய்ய அனுமதி வழங்கினார்.
தீர்ப்பின் பின்னணியில் மொட்டைச்சாமியார் அரசு ஆய்வுக் குழுவை சம்பல் மசூதிக்கு உள்ளே அனுப்ப, அந்த ஊர் மக்கள் அதை எதிர்க்க போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு என்று செல்ல மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். சம்பால் கலவர பூமியாகி விட்டது. கலவர நகரமாகி விட்டது.
No comments:
Post a Comment