தன்னுடைய முதல் சிம்பொனியை லண்டனில் பதிவு செய்துள்ளதாகவும் வரும் 26, ஜனவரி, 2025 அன்று வெளியாகும் என்றும் இளையராஜா தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மிகவும் மகிழ்ச்சி ராஜா. உங்கள் இசை மேதமையில் உருவான சிம்பொனியை கேட்டு மகிழ ஜனவரி 25, 2025 வரை நானும் பொறுமையுடன் காத்திருப்பேன்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்கையில் மனதில் ஒரு சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை,
1993 ல் லண்டன் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவிற்காக ஒரு சிம்பொனி வாசித்தீர்கள். முதன் முதலாக சிம்பொனி இசைத்த ஆசியர் என்று நீங்கள் கொண்டாடப்பட்டீர்கள். தமிழ்த்திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் மேற்கத்திய இசைக்கலைஞர்கள் உங்களை மேஸ்ட்ரோ என்றழைப்பதாக நெகிழ்ச்சியோடு பேசினீர்கள். அதன் பின்பு இசைஞானி என்ற பட்டத்துடன் படத்தின் டைட்டில்களில் “மேஸ்ட்ரோ” என்ற அடைமொழியும் இணைந்து கொண்டது.
ஆனால் அந்த சிம்பொனியை கேட்கும் வாய்ப்பு முப்பது ஆண்டுகளாகியும் கிடைக்கவில்லை. என்ன ஆனது அந்த சிம்பொனிக்கு?
லண்டன் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு அதனை முடக்கி விட்டதா?
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிம்பொனியை இசைத்த பின்பும் இப்போது ஏன் முதல் சிம்பொனி என்று சொல்ல வேண்டும்?
அதை கொஞ்சம் வெளிப்படையாக சொல்லுங்களேன்.
No comments:
Post a Comment